Google Go - தேடல்களை எளிதாகவும் விரைவாகவும் செய்ய உதவும் புதிய வழி. தேடல் முடிவுகளில் 40% வரை டேட்டா சேமிப்பு.
இணையத்தின் வேகம் குறைவாக இருந்தாலும், மொபைலில் போதிய இடம் இல்லாவிட்டாலும் கூட Google Go மூலம் தேடல் முடிவுகளை விரைவாகவும் நம்பகமாவும் பெறலாம். வெறும் 12 மெ.பை. அளவில் இதை வேகமாகப் பதிவிறக்கி சேமிப்பிடத்தையும் மிச்சப்படுத்தலாம்.
உள்ளீடு குறைவு. பயன் அதிகம். பிரபலமாகி வரும் கேள்விகளையும் தலைப்புகளையும் தட்டியும், வேண்டிய தகவலை உங்கள் குரலிலேயே கேட்டும் தேடி நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
உங்களுக்காக Google வாசிக்கும். எந்தவொரு இணையப் பக்கத்தையும் எளிதில் புரியுமாறு ஒவ்வொரு வார்த்தையாக வாசிக்க வைத்துக் கேட்கலாம்.
வேண்டிய அனைத்தும் ஒரே ஆப்ஸில். உங்களுக்குப் பிடித்த ஆப்ஸ்/ வலைதளங்கள், உங்களுக்கு ஆர்வமான தலைப்புகளைப் பற்றிய படங்கள், வீடியோக்கள், தகவல்கள் என அனைத்தையும் Google Goவில் எளிதாகவும் விரைவாகவும் அணுகலாம்.
எதையும் தவறவிட வேண்டாம். 'தேடு' என்பதை மட்டும் தட்டி சமீபத்தில் பிரபலமாகி வரும் தலைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
அரட்டைகளுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் படங்கள். "படங்கள்", "GIFகள்" ஆகியவற்றில் தட்டி பொருத்தமானவற்றைச் சேர்த்து அரட்டைகளை மேலும் சுவாரசியமாக ஆக்கலாம்.
மொழிகளுக்கிடையே எளிதாக மாறலாம். தேடல் முடிவுகளில் இரண்டாவது மொழி ஒன்றை அமைத்து எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
இணையத்தில் நீங்கள் எதைத் தேடினாலும் Google Go அதை எளிதாகவும் விரைவாகவும் கண்டறிய உதவுகிறது!
புதுப்பிக்கப்பட்டது:
7 நவ., 2024