தயவுசெய்து குறித்துக்கொள்ளுங்கள் - IMDb என்பது ஒரு காணொளி ஒளிக்காட்சித் தாரை சேவை அல்ல. முழு-நீளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இச்செயலியில் ஒளிபரப்பப்படுவதில்லை.
IMDb, இது திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் பிரபலங்கள் குறித்த தகவல்களுக்கான உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரமாகத் திகழ்கிறது. புகழ்பெற்ற திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொழுதுபோக்குச் செய்திகள், மற்றும் சமீபத்திய விருதுகள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தேடிக் கண்டு மகிழுங்கள். உங்களின் கவனிப்புப் பட்டியலைப் (Watchlist) பயன்படுத்தி நீங்கள் எதைக் காண விரும்புகிறீர்கள் என்பதைக் கண்காணியுங்கள். மேலும், நீங்கள் பார்த்த திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் தரமதிப்பீடு செய்யுங்கள். காணொளியைக் கண்டுகளியுங்கள் - பிரத்யேகமான IMDb அசல் படங்கள் முன்னோட்டங்கள், திரைக்குப் பின்னால் நிகழ்ந்த காட்சிகள் மற்றும் மேலும் பல. உங்களுக்கு அருகாமையில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் காட்சி நேரங்களை அறிந்துகொள்ளுங்கள், நுழைவுச்சீட்டுகளை வாங்குங்கள், விமர்சகர் மற்றும் பயனர் மீளாய்வுகளை வாசியுங்கள்.
கீழ்க்கண்டவற்றுக்காக உள்நுழையுங்கள்:
• உங்களின் கவனிப்புப் பட்டியலில் திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் சேர்ப்பதற்கு
• நீங்கள் கண்டவற்றைத் தரமதிப்பீடு செய்வதற்கு
• திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தனிப்பட்ட பரிந்துரைகளைப் பெறுவதற்கு
• உங்களுக்குப் பிடித்த நாடகங்களைச் சேமிப்பதற்கு
• உங்களின் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் பிரபலங்களின் தேர்வுகளைப் பகிர்ந்துகொள்வதற்கு அல்லது அதை உங்களுக்காக மட்டும் தயாரிக்கப் பட்டியல்களை உருவாக்குவதற்கு
ஆராய்க:
• 5 மில்லியனுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்ட 8 மில்லியனுக்கும் மேற்பட்ட கலைஞர்களையும் உள்ளடக்கியுள்ள எங்களது தரவுத்தளத்தில் உங்களுக்கு விருப்பமானதைக் தேடிக் கண்டு மகிழுயுங்கள்.
• சமீபத்திய பொழுதுபோக்குச் செய்திகளை வாசியுங்கள்
• மேற்கோள்கள், துணுக்குச் செய்திகள் மற்றும் முக்கியமில்லாத நடவடிக்கைகளை தேடிக் கண்டறியுங்கள்
• அகடமி விருதுகள் (ஆஸ்கர்ஸ்), கோல்டன் குளோப்ஸ், எம்மிஸ், சான் டீகோ காமிக்-கான், திரைப்பட விழாக்கள் மற்றும் மேலும் பல நிகழ்ச்சிகளின் முழுமையான காட்சித் தொகுப்பைக் கண்டுகளியுங்கள்
• சிறந்த திரைப்படத்திற்காக விருது பெறுபவர்கள், தலைசிறந்த மற்றும் மிகப் பிரபலமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலமானவர்களின் பிறந்தநாட்களை அறிந்துகொள்ளுங்கள்
• சமீபத்திய திரைப்பட முன்னோட்டங்கள், திரைப்படக் காட்சி நேரங்கள் மற்றும் அவசரச் செய்திகளுக்கான அறிவிப்புகளைப் பெறுங்கள்
எதைக் காண வேண்டும், எங்கு காண வேண்டும் என்பதை முடிவுசெய்யுங்கள்:
• சமீபத்திய முன்னோட்டங்கள், IMDb அசல் படங்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் குறுங்காட்சிகளைக் கண்டுகளியுங்கள்
• திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தரமதிப்பீடுகளை அறிந்துகொள்ளுங்கள்
• பயனர் மற்றும் விமர்சகர் மீளாய்வுகளை வாசியுங்கள்
• பிரதான காணொளியில் காண்பதற்குக் கிடைக்கின்ற தலைப்புகளைக் கண்டறியுங்கள்
காட்சி நேரங்களை அறிந்துகொள்ளுங்கள் மற்றும் உள்ளூர் திரைப்பட நுழைவுச்சீட்டுகளை வாங்குங்கள்:
• அருகாமையில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் காட்சி நேரங்களைப் பெறுவதற்கு, உங்களின் தற்போதைய இருப்பிடத்தைப் பயன்படுத்துங்கள்
• தொடக்க நேரம், முடிவு நேரம், வகை, தரமதிப்பீடு ஆகியவற்றின் மூலம் திரைப்படக் காட்சி நேரங்களை வரிசைப்படுத்துங்கள்
• நுழைவுச்சீட்டுகளை உங்கள் தொலைபேசி அல்லது கைக்கணினியில் இருந்து நேரடியாக வாங்குங்கள்
IMDb உலகம் முழுவதும் ஆங்கிலம் (யுஎஸ்/யுகே), ஸ்பானிஷ், ஜெர்மன், ஃபிரெஞ்ச், போர்ச்சுகீஸ், இத்தாலியன், ஜப்பானிஸ், கொரியன் மற்றும் சீன மொழிகளில் கிடைக்கின்றது.
நாங்கள் எதையேனும் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா? நாங்கள் எதையேனும் கவனிக்காமல் விட்டுள்ளோமா? தயவுசெய்து உங்கள் கருத்துக்களை https://getsatisfaction.com/imdb/categories/imdb_imdb_mobile -இல் பதிவிடுங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
9 டிச., 2024