இது ஒரு அமானுஷ்ய தொடர்! சென்னையில் மனைவி மகளுடன் வசித்துவரும் ஒரு டாக்டர், தன் சொந்த ஊரான மகேந்திர மங்கலத்துக்கு வந்த இடத்தில் தன் பூர்வீக வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் சித்தர்களின் ஏடுகள் உள்ளன. அந்த சுவடிகளில் உள்ளவற்றை கேட்டு வரப்போகும் நிகழ்வுகளும், அவர்களுக்கு நடுவில் அதை அபகரிக்க விழையும் ஒரு கூட்டம்! இடையில் காவேரியில் நடைபெறும் 144 வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்ந்திடும் புஷ்கரம் இக்கதையில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. இன்றைய விஞ்ஞான வாழ்வுக்கு நடுவில் மெய்ஞான நிகழ்வுகளும் நம்மை மீறி நடப்பதை சுவைபட சொல்லும் ஒரு புதிரான நாவல்.