"காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியான பிரம்மாவுக்கு ஒரு விபத்தில் பழைய நினைவுகள் அனைத்தும் முழுதாக மறந்து போக, அதை தன் புத்தி சாதுர்யத்தால் அவன் அணுகும் விதம். தன்னைப்பற்றிய உண்மை நிலையை, தனக்கு நெருக்கமானவர்களிடம் கூட மறைக்கும் அவனது புத்திசாலித்தனம். பிரம்மாவைப் பார்க்கும், படிக்கும் எவராலும் நிச்சயம் பிரமிக்காமல் இருக்கவே முடியாது. இவனைக் கொலை செய்ய முயலும் நாயகி. தன்னைக் கொல்லவரும் காயத்ரியை அவன் கண்டுகொண்டானா? காயத்ரியின் எண்ணம் ஈடேறியதா? அவனது நினைவுகள் திரும்பியதா? அவனது பழைய நினைவுகள் போயிருக்கையில், வேலையில் சேர்ந்தவன் அதை மற்றவருக்குத் தெரியாமல் எப்படி மறைத்தான்? அவனிடம் கொடுக்கப்பட்ட கேஸ் களை எவ்வாறு முடித்து வைத்தான்? அவனது நினைவு திரும்பிய பிறகு, தன்னைக் கொல்ல வந்தவளே தன் மனைவியாகி இருப்பதைப் பார்த்து என்ன முடிவெடுப்பான்? அவனது பழைய நினைவுகள் இல்லாத பொழுது அவனைத் திருமணம் செய்து கொண்ட காயத்ரியின் நிலை என்னவானது? அவள் அவனைக் கொல்ல முயன்றதன் காரணம் என்ன? அனைத்தையும் அறிய, கதைக்குள் வாருங்கள்."