"ஹிட்லர் என்கிற ஒரு மனிதன் உலகத்தில் தோன்றாமல் இருந்திருந்தால் இரண்டாவது உலக யுத்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அவரது நாடு பிடிக்கும் ஆசை. ஜரோப்பிய தேசங்களுக்கு இடையே இருந்த உட்பகை. நீயா நானா போட்டி. நிச்சயமற்ற பொருளாதார நிறைமை. ஆயுதப்பெருக்கம். பிறகு, நிறையவே மிருகத்தனம். எல்லாம் சேர்ந்து கலந்தபோது, இரண்டம் உலகப் போர் வெடித்தது. போரின் நீண்ட கரங்கள், ஜரோப்பாவில் எந்தவொரு நாட்டையும், எந்தவொரு தனி மனிதரையும் விட்டுவைக்கவில்லை. சரித்திரத்தின் ரத்தப் பக்கங்ள்தான் என்றாலும் அதை வாசித்து அறிந்துகொள்ளவேண்டிய அவசியமும் கட்டாயமும் கண்டிப்பாக இருக்கிறது."
Beletristika i književnost