இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு ஆண்களுக்கு மட்டும் இல்லை, பெண்களுக்கும் உண்டு என்று சொல்ல வருகிற கதையம்சம் கொண்ட நாவல் இது. பெண்கள் உடலளவில் மென்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் பெண்களில் பலர் உள்ளத்தளவில் வலிமை வாய்ந்தவர்கள். அப்படிப்பட்ட பெண்களுக்குப் பெயர் இரும்புப் பட்டாம்பூச்சிகள். அந்த இரும்புப் பட்டாம்பூச்சிகளில் ஒருத்திதான் இந்த நாவலின் நாயகி. அவள் செய்த சாகசம்தான் என்ன? காது கொடுத்து கேளுங்கள்.