சார்லஸ் நிக்கோலஸ் எனும் வெளிநாட்டு விஞ்ஞானி சூத்திரம் ஒன்றை கண்டறிகிறார். பூமியில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் மூலமாக அணுகுண்டு பூமியின் எந்த பாகத்திற்கு செலுத்தப்படுகிறதோ அந்த பாகம் முற்றிலும் அழிக்கப்படும். பூமியில் இருந்தே இயக்கக்கூடிய சூத்திரம் அது. இந்தியாவுடன் அதைப் பகிர்ந்துகொள்ள வருகிறார் நிகோலஸ். அவருடைய பாதுகாப்பிற்காக அரசால் நியமிக்கப்பட்டவர் உலகப்புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் மார்க்ஸின். பிந்தரன்சிங், பகதூர் சிங் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இருவர் சார்லஸ் நிக்கோலசை கடத்தி அந்த சூத்திரத்தை கண்டறிய முற்பட்டு, அதற்கென திட்டம் தீட்டுகின்றனர். அந்தத் திட்டங்கள் அனைத்தும் முறியடிக்க படுகிறது. அதையும் மீறி இந்த தீவிரவாத கூட்டணி சார்லஸ் நிக்கோலசை கடத்தி விடுகிறது. அவர்களிடமிருந்து மார்க்ஸின் நிக்கோலசை விடுவிக்கிறாரா இல்லையா என்பதே மெரைன் ட்ரைவ் கதையின் கதை களம்.
Raaisel- en spanningsverhale