"கபாடபுரம்" என்ற சொல் எந்தத் தமிழ் மகனையும் தலைநிமிர்ந்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தது. தமிழர் நாகரிகமும், தமிழ் இலக்கியச் செல்வமும் செழித்து வளர்ந்த பெருநிலப் பரப்பின்தலைநகரம் கபாடபுரம். வரலாற்றுச்செய்திகள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்ற கபாடபுரக் காலத்துச் சூழ்நிலையை வைத்துக் கொண்டு ஒரு அற்புதமான நாவலைப் படைத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்கள். பழந்தீவுகளையெல்லாம் வென்று தெற்குமா கடல் முழுதும் தன் ஆட்சியை செலுத்தும் பாண்டியப் பேரரசை நிறுவ விரும்பும், கபாடபுரத்தை ஸ்தாபித்த பெரிய பாண்டியர் வெண்தேர்ச்செழியரின் அரசியல் ஆசையும் புலவர் சிகண்டியாசிரியரால் பண்படுத்தப் பெற்ற இசையுள்ளமும் மென்மையும் படைத்த சாரகுமாரனின் இனிய கனவுகளும் ஒன்றோடொன்று மோத நடுவில் மாட்டிக்கொள்ளும் சாரகுமாரனின் காதல் என்னவாகும்? கேளுங்கள் கபாடபுரம்