மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று வருமானால் நிச்சயம் அதற்குக் காரணம் பெட்ரோலாகத்தான் இருக்கும்! ஏன் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது பெட்ரோல்? யார் ஏற்றுகிறார்கள்? நாளுக்கு நாள் ஏறிக்குதிக்கும் விலை, ஊருக்கு ஒரு விலையாக இருப்பது ஏன்? பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் தேசங்களின் கூட்டமைப்பு என்ன செய்கிறது? எங்கு வருகிறார்கள் இடைத்தரகர்கள்? எப்படி இந்தத் துறையை ஆட்டிப்படைக்கிறார்கள்? பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் தேசங்களின்மீது அமெரிக்கா குறிவைப்பதன் அரசியல் பொருளாதாரப் பின்னணிகள் என்னென்ன? மத்தியக் கிழக்கு தேசங்கள் அனைத்தும் அமெரிக்காவின் காலனிகளாகிவிடுமா? மாற்று எரிபொருள் சாத்தியங்கள் என்னென்ன? பெட்ரோலை இன்னும் எத்தனை காலத்துக்கு நம்ப முடியும்? எண்ணெய்க்காக உலகம் அடித்துக்கொண்டு சாகும்போது நாம் தப்பிப் பிழைக்க என்ன வழி? குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பரபரப்பான வெற்றி கண்டது. நமக்கு மிக நெருக்கமாக நின்று அச்சுறுத்தும் ஒரு சர்வதேசப் பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் எளிதாகப் புரிந்துகொள்ளுங்கள்!