‘ நான்’ என்று சொல்வது போலத் தமிழில் இதுவரை யாரும் சரித்திரக் கதை எழுதவில்லை என்பதால், அது மாதிரி ஒன்று நாமே எழுதினால் என்ன என்ற அசட்டுத் தைரியத்துடன் எண்ணத் தொடங்கினேன். ( வேறு இந்திய மொழியில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை) சேர, சோழ, பாண்டியர்களை வைத்து நிறையப் பேர் சிறப்பாக எழுதியிருப்பதால் அந்த வழிக்குப் போகாமல் வேறு சரித்திரங்கள் யோசித்தேன். மீரா, அக்பர், சிவாஜி என்று பலர் கண் முன் தோன்றினார்கள். கடைசியில் கிருஷ்ண தேவராயரைத் தேர்ந்தெடுத்தேன். தென்னிந்தியர்களின் சமூக, அரசியில், கலாசாரத் துறைகளில் விஜயநகரப் பேரரசு செலுத்திய செல்வாக்கைப் போல் வேறு எந்த ஆட்சியும் செய்யவில்லை. ஆகவே அவரைக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்தேன்.
- ரா. கி. ரங்கராஜன்