செம்பகசேரி தரவாட்டின் வாரிசாகிய கேசவன் குட்டியை மணக்கிறாள் ரோகிணி என்னும் அதிர்ஷ்ட பெண். அவர்களுக்கு மகளாய் பிறக்கும் தேவி பிறப்பு முதலே விசித்திரங்களையும் மாயாஜாலங்களையும் கொண்டவளாக இருக்கிறாள். அதிர்ஷ்ட தேவதையாக இருக்கும் அவளை அழிக்க நினைக்கும் அந்த ஊரை சேர்ந்த ராகவன் பிள்ளையும், மாதவன் நாயரும், அவர்கள் துணையாய் கொண்ட ஜோசியர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் நேரும் கதியை சுவாரஸ்யமாக எடுத்துரைப்பதோடு மாந்திரீகம், ஜோசியம், கந்தர்வர்கள், மோகினிகள் போன்ற அமானுஷ்ய விஷயங்களை விறுவிறுப்புடனும் சொல்லும் கதைதான் வெண்ணிலவே வெண்ணிலவே!