ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.