Aasi Peralaam Vaanga

· Pustaka Digital Media
ই-বুক
100
পৃষ্ঠা
রেটিং ও রিভিউ যাচাই করা হয়নি  আরও জানুন

এই ই-বুকের বিষয়ে

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிக்கையாளர் என பன்முக ஆளுமை கொண்ட அமிர்தம் சூர்யா, கல்கி வார இதழில் தலைமை துணையாசிரியராக 14 வருடங்கள் பணிபுரிந்தார். அப்போது தீபம் இதழில் 16 சித்தர்களின் ஜீவ சமாதிகளைத் தேடி நேரடியாக அங்கு பயணப்பட்டு.. ஜீவ சமாதிகளின் இருப்பிடம் அதன் மகிகை அங்கு பயணப்பட்டால் கிடைக்கும் மாற்றங்கள் ஆகியவற்றைத் தொடராக எழுதினார் .மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ஆன்மிக தொடர் இப்போது நூலாக உங்கள் கையில்… ஆசி பெறலாம் வாங்க என்ற தலைப்பில் சென்னையில் இதுவரை அதிகம் நீங்கள் அறிந்திரா சித்தர்களின் ஜீவ சமாதிகளை அறிந்துக்கொள்ளுங்கள். சிவனின் பிரதிநிதிகளை எழுத்தில் தரிசியுங்கள் நீங்கள் வாசிக்கும் போதே உங்கள் வாழ்வின் மாற்றத்தை உணர்வீர்கள்.

লেখক সম্পর্কে

அமிர்தம் சூர்யாவின் இயற்பெயர் இரா.ந.கதிரவன். கதிரவன் என்ற பெயரில் இருக்கும் –ன் – விகுதி பிடிக்காததால் சூர்யா என மாற்றிக்கொண்டார். நூறாண்டு வாழ்ந்த தன் பாட்டி அமிர்தம்மாள் பெயரில் உள்ள அமிர்தம் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியதால் அதை இணைத்துக்கொண்டு அமிர்தம் சூர்யாவாக ஆனார்.

57 வயதாகும் கல்கி வார இதழில் 13- ஆண்டுகள் தலைமை துணை ஆசிரியராக பணியாற்றி பணிநிறைவு பெற்றார். வடசென்னையை பூர்விகமாக கொண்ட இவர் முழுநேர எழுத்து பணியுடன் கருமாண்டி ஜங்ஷன் என்னும் யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

அமிர்தம் சூர்யா எழுதிய நூல்கள்:

உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை (2000) கவிதை - ஜெயமோகன் முன்னுரையுடன்/பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு (2006) கவிதை - சந்துரு முன்னுரையுடன்/வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் (2012) கவிதை/ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் - கவிதை - மனுஷ்ய புத்ரன் முன்னுரை/முக்கோணத்தின் நாலாவது பக்கம் (2001) கட்டுரை வெங்கட்சாமிநாதன் முன்னுரை/கடவுளை கண்டுபிடிப்பவன் 14-சிறுகதைகளின் தொகுப்பு - இந்திரா பார்த்த சாரதி முன்னுரை/ மிளகு கொடியில் படரும் கவிதை – கவிதைகள் குறித்து முக்கிய கவிஞர்களின் கட்டுரைகளை தொகுத்தது/சாகரம் -என்ற பெயரில்(2022) பெண் சித்தர்கள் பற்றிய நூல்/ சமீபத்தில்.. பறவி எனும் நாவலை (2024) எழுதி முடித்துள்ளார்.

அமிர்தம் சூர்யா பெற்ற இருப்பின் விருதுகளாக.. திருப்பூர் தமிழ் சங்க விருது/தினகரன் பரிசு/ஸ்டேட் பாங்க் அவார்ட் விருது/எழுச்சி அறக்கட்டளை விருது (சிறந்த நாடக ப்ரதிக்காக)/சி.கனகசபாபதி விருது/அன்னம் விருது/செளமா விருது போன்றவற்றை குறிப்பிடலாம்.

தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்ட அமிர்தம் சூர்யா சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர். சென்னையில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை தேடி கண்டுபிடித்து அது குறித்து ஆசி பெறலாம் வாங்க என்ற தொடரை தீபம் இதழில் எழுதினார். அந்த தொடர் தான் இப்போது உங்கள் கரங்களில் நூலாக தவழ்கிறது.

ই-বুকে রেটিং দিন

আপনার মতামত জানান।

পঠন তথ্য

স্মার্টফোন এবং ট্যাবলেট
Android এবং iPad/iPhone এর জন্য Google Play বই অ্যাপ ইনস্টল করুন। এটি আপনার অ্যাকাউন্টের সাথে অটোমেটিক সিঙ্ক হয় ও আপনি অনলাইন বা অফলাইন যাই থাকুন না কেন আপনাকে পড়তে দেয়।
ল্যাপটপ ও কম্পিউটার
Google Play থেকে কেনা অডিওবুক আপনি কম্পিউটারের ওয়েব ব্রাউজারে শুনতে পারেন।
eReader এবং অন্যান্য ডিভাইস
Kobo eReaders-এর মতো e-ink ডিভাইসে পড়তে, আপনাকে একটি ফাইল ডাউনলোড ও আপনার ডিভাইসে ট্রান্সফার করতে হবে। ব্যবহারকারীর উদ্দেশ্যে তৈরি সহায়তা কেন্দ্রতে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে যেসব eReader-এ ফাইল পড়া যাবে সেখানে ট্রান্সফার করুন।