குரு வம்சத்தின் முன்னேற்றத்தை மட்டும் பார்த்த அவர், சில பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தவறிவிட்டார். அதை, அவர் போர்க்களத்தில் அம்பு படுக்கையில் படுத்திருக்கும் போது சிலர் வந்து சொல்கிறார்கள். இது முழுக்க என் கற்பனையில் உருவான கட்டுரைகள். அந்த நேரத்தில் இவர்கள் பேசினால் எப்படி இருக்கும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள். எந்த இடத்திலும் மூலக்கதையை மீறவில்லை. படித்துப் பாருங்கள்.