அமிர்தம் சூர்யாவின் இயற்பெயர் இரா.ந.கதிரவன். கதிரவன் என்ற பெயரில் இருக்கும் –ன் – விகுதி பிடிக்காததால் சூர்யா என மாற்றிக்கொண்டார். நூறாண்டு வாழ்ந்த தன் பாட்டி அமிர்தம்மாள் பெயரில் உள்ள அமிர்தம் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியதால் அதை இணைத்துக்கொண்டு அமிர்தம் சூர்யாவாக ஆனார்.
57 வயதாகும் கல்கி வார இதழில் 13- ஆண்டுகள் தலைமை துணை ஆசிரியராக பணியாற்றி பணிநிறைவு பெற்றார். வடசென்னையை பூர்விகமாக கொண்ட இவர் முழுநேர எழுத்து பணியுடன் கருமாண்டி ஜங்ஷன் என்னும் யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
அமிர்தம் சூர்யா எழுதிய நூல்கள்:
உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை (2000) கவிதை - ஜெயமோகன் முன்னுரையுடன்/பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு (2006) கவிதை - சந்துரு முன்னுரையுடன்/வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் (2012) கவிதை/ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் - கவிதை - மனுஷ்ய புத்ரன் முன்னுரை/முக்கோணத்தின் நாலாவது பக்கம் (2001) கட்டுரை வெங்கட்சாமிநாதன் முன்னுரை/கடவுளை கண்டுபிடிப்பவன் 14-சிறுகதைகளின் தொகுப்பு - இந்திரா பார்த்த சாரதி முன்னுரை/ மிளகு கொடியில் படரும் கவிதை – கவிதைகள் குறித்து முக்கிய கவிஞர்களின் கட்டுரைகளை தொகுத்தது/சாகரம் -என்ற பெயரில்(2022) பெண் சித்தர்கள் பற்றிய நூல்/ சமீபத்தில்.. பறவி எனும் நாவலை (2024) எழுதி முடித்துள்ளார்.
அமிர்தம் சூர்யா பெற்ற இருப்பின் விருதுகளாக.. திருப்பூர் தமிழ் சங்க விருது/தினகரன் பரிசு/ஸ்டேட் பாங்க் அவார்ட் விருது/எழுச்சி அறக்கட்டளை விருது (சிறந்த நாடக ப்ரதிக்காக)/சி.கனகசபாபதி விருது/அன்னம் விருது/செளமா விருது போன்றவற்றை குறிப்பிடலாம்.
தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்ட அமிர்தம் சூர்யா சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர். சென்னையில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை தேடி கண்டுபிடித்து அது குறித்து ஆசி பெறலாம் வாங்க என்ற தொடரை தீபம் இதழில் எழுதினார். அந்த தொடர் தான் இப்போது உங்கள் கரங்களில் நூலாக தவழ்கிறது.