Azhagin Vidiyal

· Pustaka Digital Media
ई-बुक
118
पेज
रेटिंग और समीक्षाओं की पुष्टि नहीं हुई है  ज़्यादा जानें

इस ई-बुक के बारे में जानकारी

கவிஞர்களுக்கு கற்பனைத் திறனும், புதிய சிந்தனையும், நினைவாற்றலும் மிக மிக அவசியம் என்பது என் எண்ணம். நினைவாற்றல் கொண்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கிய படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் வாழ்வில் புகழ் உச்சிக்கு சென்று நிலையான பெருமைக்கு உரியவர்களாக வாழ்வின் வழி காட்டுபவர்களர்களாக திகழ்கின்றனர். என்னைப் போன்ற சிலருக்கு என்ன தான் சிந்தனைத் துளிகள் உதித்தாலும் நினைவாற்றல் குறைவால், நீர்க்குமிழியில் தோன்றும் வானவில் வண்ணங்கள் போல் நிமிடத்தில் சிதறி விடுகிறது.

கவிதைக்கு மோனையும், எதுகையும் இரு கண்கள் போன்றதாகும். உயிர்நாடியே இவை தான் என்றும் சொல்லலாம். வயல் வெளிகளில் பாடும் பெண்கள் பாட்டில் கூட இவை இருக்கும் . ஒரு பாட்டில் எதுகை மோனை சரியாக அமையாவிட்டால் ’இந்த பாட்டில் எகனை மொகனை இல்லாம என்ன பாடுரே.’ என சாதாரணமாக சொல்லி விடுவார்கள்.

"மோனை முத்தமிழ் மும்மத மும்பொழி
யானை முன்வந் தெதிர்தவ னாரடா"

என்று ஒட்டக்கூத்தர் யானையின் பெருமைக்கு காரணமான மதத்தினைப் பாட்டின் பெருமைக்கு காரணமான் மோனைத் தொடைக்கு உவமை கூறுவார்.

சீர்திருத்த சமூகங்கள் வளரட்டும்!
சிந்தனை மலர்கள் மலரட்டும்

लेखक के बारे में

பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி). எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி சந்திரன் ”நிலவனா”க மாறிட புனைப்பெயர் உதயமானது. விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம், சேவை சிற்பி பணி: தனியார் அலுவலில் இயக்குனராக... வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள், வாசிப்புகள், அளவளாவுதல்கள், எழுதுதல், இரசிக்கின்றவைகள்… இன்னும்… இன்னும்... </p.

इस ई-बुक को रेटिंग दें

हमें अपनी राय बताएं.

पठन जानकारी

स्मार्टफ़ोन और टैबलेट
Android और iPad/iPhone के लिए Google Play किताबें ऐप्लिकेशन इंस्टॉल करें. यह आपके खाते के साथ अपने आप सिंक हो जाता है और आपको कहीं भी ऑनलाइन या ऑफ़लाइन पढ़ने की सुविधा देता है.
लैपटॉप और कंप्यूटर
आप अपने कंप्यूटर के वेब ब्राउज़र का उपयोग करके Google Play पर खरीदी गई ऑडियो किताबें सुन सकते हैं.
eReaders और अन्य डिवाइस
Kobo ई-रीडर जैसी ई-इंक डिवाइसों पर कुछ पढ़ने के लिए, आपको फ़ाइल डाउनलोड करके उसे अपने डिवाइस पर ट्रांसफ़र करना होगा. ई-रीडर पर काम करने वाली फ़ाइलों को ई-रीडर पर ट्रांसफ़र करने के लिए, सहायता केंद्र के निर्देशों का पालन करें.