அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘விற்பனையில் வெற்றி’ எனும் இந்நூலில், விற்பனைத் தொழிலில் நீங்கள் வெற்றிக் கொடி நாட்டுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய 21 உத்திகளை விற்பனை விற்பன்னரான பிரையன் டிரேசி விரிவாக விளக்கியிருக்கிறார்.
அவற்றில் பின்வருவனவும் அடங்கும்:
· தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, ஒவ்வொரு நிமிடத்தையும் சிறப்பாகப் பயன்படுத்துதல்
· உங்களுடைய விற்பனைப் பொருளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் விரல்நுனியில் வைத்திருத்தல்
· வாடிக்கையாளர்களாக ஆவதற்குச் சாத்தியமுள்ளவர்களுடன் துவக்கத்திலேயே நம்பிக்கையையும் ஒரு நல்ல உறவையும் வளர்த்தெடுத்தல்
· ஆற்றல்மிக்க விளக்கவுரைகளை உருவாக்குதல்
· ஆறு முக்கிய ஆட்சேபனைகளைச் சமாளித்தல்
நடவடிக்கை எடுக்கும்படி வாடிக்கையாளர்களைத் தூண்டுதல்உலகில் இன்று தலைசிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழுபவர் பிரையன் டிரேசி. 75 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பெருநிறுவனங்களுக்கும் 10,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தலைமைத்துவம், மேலாண்மை, விற்பனை, வியாபார மாதிரி மறுசீரமைப்பு, லாப மேம்பாடு ஆகிய விஷயங்களில் பல கருத்தரங்குகளை அவர் வடிவமைத்து வழங்கியுள்ளார். உலகம் நெடுகிலும் 5,000க்கும் அதிகமான சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். இதை 50,00,000க்கும் அதிகமானோர் கேட்டுள்ளனர். அவர் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 2,50,000 மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் உருவாக்கியுள்ள சுவாரசியமான, காணொளி சார்ந்த பயிற்சி வகுப்புகள் 38 நாடுகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிரையன் டிரேசி ஒரு வெற்றிகரமான நூலாசிரியர். அவர் 80க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவை 42க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.