Charulatha

· Pustaka Digital Media
ই-বুক
158
পৃষ্ঠা
রেটিং ও রিভিউ যাচাই করা হয়নি  আরও জানুন

এই ই-বুকের বিষয়ে

சாருலதா ஒரு முடிவற்ற காதல் யாத்திரையின் தேடல்.

சத்யஜித்ரேயின் சாருலதா எப்படிப்பட்டவள். இயற்கையோடு இயற்கையாய் இயைந்து போயிருப்பவள். இயற்கையோடான ரசனை, சிநேகிப்பு, நேசிப்பு அவளை இயற்கையாகவே ஆக்கிவிடுகிறது. கவித்துவமான வாழ்விற்கான தேடலை, புரிதல் நிறைந்த துணையை, சொல்லுக்குள் அடக்க இயலாத ஏக்கத்தின் யுகாந்திரத் தவிப்பை அவளின் தேடல் உணர்த்திச் சென்றவண்ணமிருக்கின்றன.

இந்தத் திரைக்காவியமானது இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நஷ்டனிர் அல்லது தி ப்ரோக்கன் நெஸ்ட் என்கிற நாவலின் மூலம், சத்யஜித்ரேயின் கைவண்ணத்தில் அபாரமான திரைக்கதையாக பரிமளித்தது. அந்தத் திரைக்கதையை அடியற்றி எழுதப்பட்ட நாவல் தான் இது, இந்தப் படம் 1964-ல் வெளிவந்திருக்கிறது. இது ஒரு வங்கமொழிப் படம். இந்தப் படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது பெர்லின் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகச் சிறந்த படத்துக்கான விருதை 1965-ம் வருடம் இந்தப் படம் பெற்றிருக்கிறது.

கதை என்று பார்த்தால் இரண்டு வரிக்கதை தான். எந்தவிதமான மெலோடிராமாக்களும் இதில் கிடையாது. யதார்த்தமான நிகழ்வுகளின் நகர்வுகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் உணர்வுகள் ததும்பும் உயிரோட்டம் எங்கும் ததும்பியிருக்கிறது.

இதில் வருகிற நாயகி சாருலதாவாக நடித்திருக்கிற மாதவி சட்டர்ஜி ஒரு அபாரமான நடிகை. இந்தப் படத்தை வெளிநாடுகளில் வெளியிட்டபோது, அதற்குத் தரப்பட்ட தலைப்பு தி லோன்லி வொய்ஃப். ஒரு அரசியல் நாளிதழ் நடத்திக்கொண்டிருக்கிற வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பூபதிக்கு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வாழ்க்கைப்பட்டு வருகிறாள் சாருலதா. அவனுடைய ஆசை நாட்டின் சுதந்திரம் மற்றும் வறுமையற்ற இந்தியா. உடலியல், பொருளியல், அரசியல் சார்ந்தே அவனின் தேடல் இருக்கிறது. செய்திகள்.... செய்திகள்.... செய்திகள்.... போசாக்கான உணவு, புகைபிடிக்கும் குழல், தன்னுடைய பத்திரிகை அலுவலகம் இவ்வளவு தான் அவனுடைய உலகம். இவளோ கனவுகளில், கற்பனைகளில், இலக்கியங்களில் நிஜத்தைப் பாக்க விரும்புகிறவள். குயிலோடு, கிளியோடு, செடிகொடிகளோடு சரளமாகப் பேசுகிறவள். அவள் அவளுக்காக, அவளுடைய உண்மைகளுக்காகவே வாழ விரும்புகிறவள். இயற்கையோடு நட்பு வைத்துக் கொண்டு தனது பிரத்யேக உலகத்தில் தன்னந்தனிமையில் சஞ்சரித்துக்கொண்டிருப்பவள். அப்போது தான் பூபதிக்கு உதவியாக அங்கே வந்து தங்குகிறான் அவனின் ஒன்றுவிட்ட தம்பி அமல். அவனுக்கும் கதை, கவிதை, கட்டுரை, இயற்கை என்று இவை அத்தனையிலும் சாருவைப் போலவே ஈடுபாடு. ஒரே மாதிரி ரசனை.

சாருலதா மனதிற்குள் நிலவியிருந்த வெறுமையை அவனின் நட்பு விரட்டியடிக்கிறது. அவளுக்குள் அவள் உயிரூட்டி வைத்திருந்த அவளின் கனவு மனிதனாக அமல் இருப்பது அறிந்ததில் சாருலதாவுக்கு ஆச்சர்யம். இந்த மூன்று மையக் கதாபாத்திரங்களுக்குள் நடக்கிற உணர்வுப் போராட்டத்தைத் தான் ரே கவிதையாக, அழியாக் காவியமாக வடித்திருக்கிறார். ஒரு முழுக் கதையும் ஒரு வீடு, அதைச் சுற்றியுள்ள தோட்டம், அதன் ஓரமாயிருக்கிற பத்திரிகை அலுவலகம் முதலான இடங்களில் தான் நடக்கிறது. மொத்தமே ஐந்து கதைமாந்தர்கள் தான். அதில் ஒரு அற்புதமான காவியத்தை ரே சாத்தியப்படுத்திக் காட்டுகிறார்.

உடல் மயக்கத்தையும் கடந்த அபாரமான ஈர்ப்பாக இங்கே ஒரு பிளட்டோனிக் காதல் விரவி நிற்கிறது. இதனைக் கடந்து செல்கிற ஒவ்வொருவரின் உணர்விற்குள்ளும் ஊடுறுவிப் பதிவு கொண்டு விடுகிறது இப்படைப்பு.

அவள் அவன் மீது கொண்டிருக்கிற அன்பை மௌனத்தால், கோபத்தால், அழுகையால், குறியீடுகளால் என்று தனதான சகல பரிமாணங்களிலும் வெளிப்படுத்துகிறாள். அவளுக்குள் சதா உறைவு கொண்டிருக்கிற அது, ஒரு இனம்புரியாத அன்பின் ஏக்கக் குரல். நீண்டு மௌனமாய் நிசப்தத்திற்குள் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கிற சுதந்திரம் தேடும் பெண்மையின் ஒருமித்த உணர்வின் குறியீடாய் உள்ளார்ந்த ராகமாய் இசைத்துக் கொண்டேயிருக்கிற உணர்வின் அடர்த்தி.

இந்தக் நாவலைப் படிப்பது மட்டுமல்ல நினைப்பதும்கூட உணர்வின் ஒருமித்த மனக் குவிப்புடன் நிகழும் தியானிப்பே. ஒரு ஆழ்ந்த தியானிப்பிற்குள் பயணித்து, ஆயித்து, தெளிந்து, உளமேறி, சக்தியுற்று, எடை கரைந்து அதில் மிதக்கச் செய்கிற பரவச அனுபவம் அது. எத்தனை முறை பார்த்தாலும் அது விளைவிக்கிற சிலிர்ப்பு அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறதே தவிர, குறைந்ததேயில்லை என்கிற ஆச்சர்யம் தான் இதனைப் பார்த்துக்கொண்டே இருக்க வைக்கிறது. அதே உணர்வை நாவல் வடிவில் இதனை தரிசிக்கிற ஒவ்வொரு மனதும் எய்தும்....எய்திக் கொண்டேயிருக்கும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோடு இதனை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.

நேசத்தோடு, தி. குலசேகர்

লেখক সম্পর্কে

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

ই-বুকে রেটিং দিন

আপনার মতামত জানান।

পঠন তথ্য

স্মার্টফোন এবং ট্যাবলেট
Android এবং iPad/iPhone এর জন্য Google Play বই অ্যাপ ইনস্টল করুন। এটি আপনার অ্যাকাউন্টের সাথে অটোমেটিক সিঙ্ক হয় ও আপনি অনলাইন বা অফলাইন যাই থাকুন না কেন আপনাকে পড়তে দেয়।
ল্যাপটপ ও কম্পিউটার
Google Play থেকে কেনা অডিওবুক আপনি কম্পিউটারের ওয়েব ব্রাউজারে শুনতে পারেন।
eReader এবং অন্যান্য ডিভাইস
Kobo eReaders-এর মতো e-ink ডিভাইসে পড়তে, আপনাকে একটি ফাইল ডাউনলোড ও আপনার ডিভাইসে ট্রান্সফার করতে হবে। ব্যবহারকারীর উদ্দেশ্যে তৈরি সহায়তা কেন্দ্রতে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে যেসব eReader-এ ফাইল পড়া যাবে সেখানে ট্রান্সফার করুন।