இக்கதையில் மிகவும் சிக்கலான பல சூழ்நிலைகளை ஏற்படுத்தி, சுவை குன்றாமல், வெற்றிகரமாக பின்னால் அவற்றை விடுவிக்கிறார். சென்னையில் ஒரு பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கும் அசோக், ஊட்டியில் இருக்கும் தன் நண்பனுடன் தங்கி, அங்கு வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறையை ஆராய வருகிறான். நண்பனுடன் அவன் ஊட்டி பங்களாவில் தங்கியிருக்கையில், சில மோசமான சம்பவங்கள் நடந்து விடுகின்றன. தன்மேல் விழுந்த பழியைத் தீர்க்க அவன் பல நுட்பமான வழிகளைக் கையாண்டு, தன் மதி நுட்பத்தால் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து, சமுதாயத்துக்கு அடையாளம் காட்டுகிறான். சிறந்த முறையில் எளிய நடையில் கதை கொண்டு செல்லப்பட்டுள்ளது. வாசகர்கள் என்றும் போல் ஆதரவு தந்து ஊக்கப்படுத்த வேண்டுகிறோம்.
Szórakoztató és szépirodalom