"என் செல்லங்கள்" கற்பனைக் கதை அல்ல. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, இன்று வரை எங்கள் இல்லத்தின் செல்வங்களாய், வளர்ப்புக் குழந்தைகளாய்த் திகழும் நாய்களைப் பற்றின சம்பவங்களின் தொகுப்பே இக் கட்டுரைத் தொடர் ஆகும்.
நாய் என்றால் நன்றியின் மறு உருவம் என்று மட்டுமே நம்மில் பலருக்குத் தெரியும் - இல்லை, இல்லை. நன்றி, அன்பு, விளையாட்டு, குறும்பு, புத்திசாலித்தனம், நேர்மை, கண்டிப்பு இன்னும் எத்தனையோ அருமையான குணாதிசயங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஜீவன் ஒரு நாய் என்பதை நம்மில் எத்தனை பேர்கள் அனுபவித்திருக்கிறார்கள்?
நாங்கள் - எங்கள் குடும்பத்தினர் - இதையெல்லாம் அனுபவித்து உணர்ந்திருக்கிறோம் என்பதற்கு இந்தப் புத்தகம் சாட்சி.
என் அப்பா, அம்மா, பெரியண்ணா, சின்ன அண்ணா, அக்காவுக்கும், இந்தக் கட்டுரைத் தொடரின் கதாநாயக, நாயகிகளான என் செல்லங்களுக்கும் இந்தப் புத்தகத்தை சமர்ப்பணம் செய்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன், சிவசங்கரி