வெக்ஸ் கிங் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்துகின்றவர். இவர் ஓர் எழுத்தாளர், தனிநபர் பயிற்றுவிப்பாளர் மற்றும் தொழிலதிபரும்கூட. தான் வளர்ந்து வந்த காலத்தில் அவர் பல சவால்களை எதிர்கொண்டார். அவர் ஒரு குழந்தையாக இருந்தபோதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். அவருடைய குடும்பத்தினர் பல சமயங்களில் வீடின்றி இருந்தனர். பிரச்சனைகரமான பகுதிகளில் அவர் வளர்ந்தார். அவர் அங்கு தீவிர இனப் பாகுபாட்டிற்கு ஆளானார். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, அவர் தன்னுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றினார். இப்போது அவர் ‘பான் விட்டா’ என்ற ஒரு தொழிலுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். வெக்ஸ் கிங் தன்னுடைய பிரபலமான இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகத்தின் ஒரு மூலாதாரமாக உருவாகியுள்ளார்.