நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரின் காதல் கவிதை ஒன்று எனக்குக் கிடைத்தது. அந்தக் கவிதை இதோ:
காதல்
அவன்!
அன்பே,
அன்பழகனைப்போல்
என்னிடம்
அடுக்கு மாடியில்லை;
ஆனால்
அன்பிருக்கிறது.
கதிரேசனைப்போல்
என்னிடம்
காசு இல்லை;
ஆனால்
காதலிருக்கிறது.
தமிழரசனைப்போல்
என்னிடம்
தங்கம் இல்லை;
ஆனால்...
தங்கமனமிருக்கிறது.
சொல் உயிரே,
உனக்காக நான்
எதையும் செய்வேன்.
என்ன செய்ய?
அவள்
நல்லது காதலா,
ஒன்று செய், போதும்
நீ குறிப்பிட்ட
மூவரில்
யாரையாவது
எனக்கு
அறிமுகப்படுத்தேன்.
இது நடைமுறைக் காதல் இந்தக் காதலை தொட்டால் தொடரும் நாவலில் பார்த்தோம்.
இந்த நாவலில் திலகா தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு காதல் தியாகம் செய்கிறாள். அதன் விளைவு என்ன? இந்த நாவலைத்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்களே.