கதையின் நாயகன் : அதர்வா. கதையின் நாயகி : உதயதாரா. உதயதாராவுக்கு திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிவுக்கு வர, புகுந்த வீட்டினர் செய்த சதியின் காரணமாக வாழ்க்கையே சூனியமாகும் நிலைக்கு தள்ளப்பட்ட நாயகி. நாயகனுக்கோ... வாழ்க்கையின் சந்தோஷங்கள் அனைத்தும் துவங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்திருக்க, கையில் குழந்தையோடு தனித்திருக்கிறான். இவர்கள் இருவரும் ஒரு வாழ்க்கை புள்ளியில் சந்தித்தால்? நாயகியின் உண்மை நிலை அறியாமல் திருமணம் செய்துகொள்ளும் அதர்வா, அவளது உண்மை நிலை தெரிய வருகையில் அவளைவிட்டு விலகுவானா? இல்லையென்றால் ஏற்றுக் கொள்வானா? உதயதாராவுக்கே தன் உண்மை நிலை தெரியாமலே அவனை மணந்திருந்தால்? தன் நிலை தெரிந்து அவனை விட்டு விலகுவாளா? இல்லையென்றால் அவன்மேல் கொண்ட நேசத்தால், அவனைவிட்டு விலக முடியாமல் தவிப்பாளா? விடையறிய முடியாத பல கேள்விகளின் சுழலுக்குள் அவர்கள் வாழ்க்கை சிக்கிக்கொள்ள, விடையறிய தொடர்ந்து பயணியுங்கள்.