பல்வேறு மனிதர்கள், பலவகையான கலாச்சாரம்..! சண்டைகள், சந்தோஷங்கள் என்று கலந்துகட்டிய நாகரீகம்..!
அப்படியொரு அபார்ட்மன்ட்டில் எதிரெதிர் வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் எப்படி ஜீவிக்கின்றன என்பதை சிறந்த நகைச்சுவையோடும், காதல் ததும்பவும் சொல்லும் கதை.
டெர்ம்-எக்ஸாம் போல, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்களுக்குள் பலப்பரீட்சை நடத்தாவிட்டால், அந்த இரண்டு பெண்களுக்கும் தின்ற சோறு செரிப்பதில்லை. ‘அபார்ட்மன்ட்’ வாசிகள் இதற்கு வைத்திருக்கும் பெயர் “வாய்ஜால ரெஸ்ட்லிங்.” வாய்ச்சொற்களால் நடைபெறும் மல்யுத்தம்.
ஆம்..! இந்தக் கதையின் சுவாரசியமும் அந்த இரண்டு பெண்களின் வாய்ஜாலத்தால் மெருகேறுகிறது. யார் அவர்கள்?
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.