Kannadi Kalvettugal

· Pustaka Digital Media
Электронная книга
206
Количество страниц
Оценки и отзывы не проверены. Подробнее…

Об электронной книге

வணக்கம்

சரித்திரம் என்பது மன்னர்கள் செய்தது மாத்திரமல்ல.

மன்னர்கள் செய்த சாதனைகள், அதிசயங்கள் எல்லாம் கல்வெட்டுகளிலும் பனை ஒலை பழஞ்சுவடிகளும் கல்வெட்டு வாசகங்களும் இல்லாத காரணத்தால் அந்த மக்களின் வாழ்க்கை இருள் மூடிக்கிடக்கிறது. அந்த மக்கள் செய்த சரித்திரங்களும், மக்களால் சொல்லப்படும் நிஜங்களுமே இந்தத் தொடர்பின் சாரம்!

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு பாதிப்பு உண்டு! அவை அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும் தலை முறையாய் அந்த சம்பவங்கள் வயதானவர்களால் வாலிபர்களுக்கு சொல்லப்பட்டு காலம் காலமாய் பயணமாகும்!

அந்த கதைகள் நடந்தவையாக நிஜங்களாக சில இதயங்களுக்குள் வாழ்ந்து வரும்! அப்படிப்பட்ட ஊருக்கு ஒரு நிஜத்தைக் தேடி எடுத்து எழுத நினைத்த்தே இந்தத் தொடர் உருவாக முதல் பொரி!

அப்படி ஊர் ஊராய் அறிந்தவர் அறியாதவர் என அனைவரிடமும் விசாரித்து கேட்ட போது அவர்களில் சிலர் சொன்ன சம்பவங்கள் சரித்திரங்களை விட பிரமிப்பாய் வியப்பாய் பாதிப்பாய் இருந்தன.

இந்த சம்பவங்களுக்கு ஆதாரமில்லை! இவைகள் அவ்வூர் பகுதியில் உள்ள ஒரு சிலருக்கோ அல்லது ஒருவருக்கு மட்டுமோ தெரிந்த செய்திகளாக இருக்கலாம்! காது வழி கேட்ட கனமான நிகழ்வுகளை கவிதை மூலம் நிறம் கூட்டி கொஞ்சம் திரைக்கதை அமைத்த போது இந்த எழுத்தோட்டம் உருவானது. ஒரு சில சம்பவங்களில் சமுதாயம் கருதி ஊர் அல்லது நபர்களின் பெயர்களை மாற்றம் செய்திருக்கிறேன்!

இதை நம்பினால் நிஜம்! நம்பாவிட்டால் கதை! நம்புவீர்கள் என்ற நம்பிக்கையோடு முன்னுரையை முடிக்கிறேன்.

என்றும் அன்புடன் பா.விஜய்

Об авторе

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Оцените электронную книгу

Поделитесь с нами своим мнением.

Где читать книги

Смартфоны и планшеты
Установите приложение Google Play Книги для Android или iPad/iPhone. Оно синхронизируется с вашим аккаунтом автоматически, и вы сможете читать любимые книги онлайн и офлайн где угодно.
Ноутбуки и настольные компьютеры
Слушайте аудиокниги из Google Play в веб-браузере на компьютере.
Устройства для чтения книг
Чтобы открыть книгу на таком устройстве для чтения, как Kobo, скачайте файл и добавьте его на устройство. Подробные инструкции можно найти в Справочном центре.