சாப்ளின் பேசும் படம் தோன்றிவிட்ட காலக்கட்டத்திலும்கூட மௌனப் படங்களையே எடுத்து வந்தார். முகபாவங்கள் மூலமாக உணர்த்த வேண்டிய விசயத்தை உரையாடல்கள் மூலம் விளக்க ஆரம்பிக்கும்போது சினிமா தன் ஜீவனை இழந்துவிடக்கூடும் என்று அவர் நம்பினார். முகபாவங்களினால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்க மௌனப்படங்கள் சாதகமாயிருப்பதாய் நினைத்தார்.
இது ஒரு அற்புதமான காதல் கதை.
சைட் அன்ட் சவுண்ட் என்கிற பிரபல இதழ் நடத்தின வோட்டெடுப்பில் உலகின் மிகச் சிறந்த படவரிசையில் இந்த காவியத்திற்கு கிடைத்திருப்பது இரண்டாவது இடம்.
இந்தப் படத்தின் பிரிமியர் காட்சிக்கு சாப்ளினுடைய ஸ்பெஷல் கெஸ்டாக வந்திருந்தவர் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் அவர் மனைவி எல்சா.
சாப்ளினின் மௌனப்பட நுட்பத்தை அடியற்றி என்பதுகளில் கமல்ஹாசன் பேசும் படம் என்கிற பேசப்படுகிற ஒரு மௌனப்படம் உருவாக்கி உலகம் முழுக்க வெளியிட்டிருக்கிறார். அது ஒரு நல்ல முயற்சி.
மொழிகளிலேயே அற்புதமான மொழி மௌனம். உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் மொழி அது. அந்த மொழியில் படம் எடுத்தால் டப் செய்யப்படாமலே உலகம் முழுவதும் மொழி தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் இந்தக் கலையை பார்த்து ரசிக்க முடியும் என்பது மௌனப்படங்களின் தனிச்சிறப்பு.
கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இத்திரைக்காவியம் நுட்பமான காதலியல் கொண்டிருப்பது படிப்பவர்களை சிலிர்ப்பின் சிகரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது என் திடமான நம்பிக்கை.
நேசத்தோடு, தி. குலசேகர்
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.