கனவில் எதை எல்லாம் கண்டாளோ... அதை எல்லாம் நேரில் பார்க்க நேர்ந்தபோது...அவள் வியப்பின் விளிம்பிற்கே சென்று விடுகிறாள்.
கதைக்களம்... இதுவரை யாரும் தொடாத களம்! சி.எல்.ஆர்.ஐ...! இதை வாசித்தால் நிறைய பேர் ஆசைப்பட்டு சி.எல்.ஆர்.ஐ-யில் சேர்ந்து விடுவார்கள் என்று என் மகள் கூறினாள். அவள் சி.எல்.ஆர்.ஐ-யில் பி.டெக் லெதர் டெக்னாலாஜி படிக்கும் மாணவி.
இன்னொரு களம்... அந்தமான் தீவு...!
மென்மையான காதல் + சித்தர் – அமானுஷ்யம் கலந்து இக்கதையை புனைந்திருக்கிறேன்.
முதல் பகுதியில் சி.எல்.ஆர்.ஐ... பிராதான கதைக்களமாய் வரும்... அந்தமான் தீவு கனவில் ஒரு சில தருணங்களில்... அழகான காட்சியாய் விரியும்.
இரண்டாம் பகுதியில்... சித்தரின் சித்தாடல்களையும் மயிர் கூச்செறிய வைக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும்... அந்தமான் தீவில் அரங்கேறுவதை வாசகர்கள் வாசித்து மகிழலாம்.
‘காண வேண்டும் சீக்கிரம்...!’ இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும். வாசிக்க தவறாதீர்கள்.
அன்புடன் உங்கள்
திருமதி. லட்சுமி பிரபா