“உன்னுடைய ஹப்பி இது எல்லாத்துக்கும் ஆப்போஸிட் ரகம். எப்பவாவது ஒருமுறை அத்திப்பூத்த மாதிரி அவர் முகத்துல சிரிப்பைப் பார்க்கலாம். மற்றபடி ஆல்வேஸ் கறார் கந்தசாமி. வீக்-என்ட் என்டர்டெயின்மன்ட் அப்படியெல்லாம் அவர் ஆசைப்பட்டு நான் பார்த்ததில்ல. அட்-டைம்ஸ், வெளியூர் போவாரு... எல்லாமே பிசினஸ் ட்ரிப்பா இருக்கும். பணம், பிசினஸ், லேப்டாப் இந்த மூன்றும் இல்லேன்னா, அது எங்க அரவிந்தனே கிடையாது.”
எல்லாவற்றையும் சொல்லிமுடித்த தினுசில் களுக்கெனச் சிரித்தார் மங்கை. அந்தச் சிரிப்பில் கலந்துகொள்ள ரஞ்சனிக்கு விருப்பமில்லை.
இத்தனை நாட்கள் அரவிந்தன் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இனிமேலும் அதே ஜோரில் இருக்கமுடியுமா என்ன... அதுவும் ரஞ்சனி இங்கே வந்த பிறகு..!
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.