புண்ணிய ஸ்தலங்களில் விசேஷ நாட்களில் நிற்க இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
முன்பு திருவண்ணாமலை திருச்சி சேலம் போல ஒரு ஊராகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது 30 நாளைக்கு ஒருமுறை ஐந்து லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் மாபெரும் க்ஷேத்திரமாகி விட்டது.
மனிதன் தன்னையும் தன் இனத்தையும் நம்புவதை விட இறையை நம்புவதை பெரிதாக நினைப்பதையே இது காட்டுகிறது.
மனித வாழ்க்கையிலும் ஆயிரம் அழுத்தங்கள். அவனுக்கு சன்னதியில்தான் மனது லேசாகிறது. அவரிடம்தான் குறைகளைச் சொல்லி அழ முடிகிறது. கடவுள் கல்லாக இருப்பது அவனுக்குப் பிடித்திருக்கிறது. அவரே ஒரு ஜீவனாக கண்ணுக்குத் தெரிந்தால் இவ்வளவு தூரம் அவன் இறையை விரும்புவானா என்றெல்லாம் நானும் யோசிக்கிறேன்.
இது இன்றைய கால நிலை.
இதனுள் என் ஆன்மிக கருத்துக்களையும் பதிவு செய்ய இந்த நாவல்கள் உதவி செய்கின்றன.
எனது கருத்து என்னும்போதே அதில் சரிகளும், தவறுகளும் இருக்க வாய்ப்பிருப்பதையும் கொள்ளுவன கொண்டு, தள்ளுவதைத் தள்ளிவிடுவதே சாலச் சிறந்த செயலாகும் என்பதையும் கூறி ரகசியத்திற்கு அனைவரையும் காது கொடுக்க அழைக்கிறேன்.
அன்புடன்
இந்திரா செளந்தர்ராஜன்