சற்றும் எதிர்பாராமல் அவன் முந்திக்கொள்ள, ஆருத்ராவுக்கு அடிவயிற்றில் ஐஸ்கட்டிகள் உருண்டது.
என்ன சொல்ல வருகிறான்?
சிலீரென்று முதுகுத்தண்டில் என்னவோ ஊடுருவிச் செல்ல, ஆரூவின் பின்கழுத்தில் தாளமுடியாத குறுகுறுப்பு. அருகில்
உள்ள எதையாவது எடுத்துக் கட்டிக்கொள்ள வேண்டும் போல வெறி.
என்ன மாதிரியான உணர்வு இது. வாழ்க்கையில் இதுவரை அவள் அனுபவித்துப் பார்த்திராத ஆனந்தமான உணர்வு.
பதில் வராத அவள் மௌனத்தை சில நொடிகள் இரசித்தானோ? அவனே தொடர்ந்தான்.
“டென்னிஸ்ல ஜீரோ ஸ்கோர்தானே லவ்..! ஐ ஆல்வேஸ் லைக் தி லவ்கேம்.”
பொசுக்கென்று போனதில் அலைபேசியை முறைத்தாள். இப்போது நீ பேசியது டென்னிஸ் பற்றியா?
“நானும், ஆருத்ராவும் ஒருநாள் தனியாக விளையாடணும். நான் ஆரூவை ஜெயிக்கிறேனா, ஆரூ என்னை ஜெயிக்கறாங்களான்னு பார்க்கணும்.”
ஐயோ..! தனியாக விளையாடவேண்டுமா? எந்த விளையாட்டைச் சொல்கிறான்? மீண்டும் அவளுக்குள் ‘காதல் ஃகிராப்’ விர்ரென்று ஏறியது.
அதற்குள் அவனை அந்தப்பக்கம் யாரோ அழைக்க, “உங்ககிட்ட பிறகு பேசறேன் ஆருத்ரா.” என்று விடைபெற்றான்.
தலையணையில் குபுக்கென்று முகம் புதைத்தாள்.
என்றுதான் இருவரும் நேரடியாக ‘ஐ லவ் யூ’ சொல்லப் போகிறார்களோ?
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.