நாம். கர்மயோகம் செயல் புசிவதை வழியுறுத்துகிது. ஊழ்வினை சூழும் என்பதற்கு அஞ்சி கர்மம் புரிவதை நிறுத்தாதே ஏனெனில கர்மம் புசியாமல இவ்வுலகினில் உயிர் ஜீவித்து இருக்க முடியாது சுவாசிப்பதும், எண்ணுவதும் கூட கர்மமே. விளையாட மைதானத்தில் வீரராய் இறங்கிவிட்ட பிறகு பயந்து பின்வாங்குதல் இழுக்கல்லவா என்பது கீதையில் கண்ணணின் உபதேசம். ஞானயோகம் இதுவல்ல, இதுவல்ல என்று அறிவினால் பகுத்தறிந்து நான் உடலல்ல, மனமல்ல, புத்தியல்ல என்று மறுத்துக்கொண்டே வந்து இறுதியில் அகம் பிரம்மாஸ்மி எனஉணர்வது. ராஜயோகம் செயல்புரிவதற்கான சக்தியும் எதையும் எதிர்க்கத் துணியும் வல்லமையும், அகண்ட சாம்ராஜ்யத்தை நிறுவிடும் ஆற்றலும், சகலரையும் அதிகாரம் செய்து வாங்கிடும் குணமும் ராஜயோகத்தால் அமைந்திடும். பக்தியோகம் என்பது எப்போது நாம் உடலாயிருகின்றோமோ அப்போதுவரை நானே எல்லாம் என்ற கூற்றை சொல்லமுடியாது. ஏனெனில் மூலக்கூறுகளால் இணைந்து ஏற்பட்ட எந்தவொன்றும் அழியவே செய்யும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. மனிதனாய் இருக்கின்றவரை நான் - அவன் என்ற பாவமே சிறந்தது நான் சேவகன் அவன் - எஜமான் என்ற நிலையில் இறைவனுடைய நாமங்களைஓம் சரவணபவ), அனுதினமும் உச்சரித்து. பூனைக்குட்டியை தாய் எந்த இடத்தில் வைக்கின்றதோ அது சகதியானாலும், வெப்பம் மிகுந்த இடமானாலும், முள்வேலியானாலும் துயருரும்போது பூனைக்குட்டி கத்தி தாயை அழைக்கும் வேறென்ன செய்யமுடியும் அந்தக் குட்டியால். அப்பூனைக்குட்டியைப் போலவே நாம் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும்போது இறைவனைக் கூவி அழைக்கின்றோம். வேறன்ன செய்ய முடியும் எங்களால் என்று இறைவனின் மீதுள்ள நம்பிக்கையால் துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து கொண்டு வாழ்கின்றோம்.
ஒரு கதை உண்டு ராமர் கங்கையில் குளிக்கச் செல்லும் போது இருளாக இருந்ததால் அம்பை கீழே படுக்கை நிலையில் வைத்துச் சொன்னார் குளித்துவிட்டு வந்து தேட வேண்டி வரும் என நினைத்து அம்பின் கூர்மையான முனையை மணலில் ஊன்றி வைத்துவிட்டுச் சென்றார். கரையேறிய பின் அம்பை பிடுங்கும் போது கூர்முனை தவளையின் உடலை கிழித்துகொண்டிருந்தது அது உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இராமனின் இதயம் கருணை கொண்டு அ த் த வ ளை யி ட ம் நீ உடனே கத்தி கூப்பிட்டிருந்தால் நான் விடுவித்து இருப்பேனே உனக்கு இந்நிலை ஏற்பட்டு இருக்காதே என்றார். அதற்கு அத்தவளை யாராவது எனக்கு தீங்கிழைத்தால் ராமா ராமா என்று கத்துவேன் அந்த ராமரே அம்பினால் குத்தும்போது யாரை கூப்பிடுவேன் என்று கூறி உயிரை விட்டது. இராமனின் கண்ணீர்த் துளி மணலில் பட்டுத்தெரித்தது. பரமாத்மாவை தன் பக்தியினால் கண்ணீர்விடச் செய்த தவளை நம்மை விட மிக உயர்ந்த இடத்தில் நிற்கிறது. அனுமன் கடல்தாண்டிட இராமரின் மீதுள்ள அளவுகடந்த பக்தியே காரணம். வானரனான அனுமன் இந்த கலியுகம் வரை தெய்வமாய் வழிபடபடுவதற்கு அனுமன் ராமர்மீதுகொண்ட பக்தியே காரணம். கந்தனுடைள அனுபூதி பெற்ற அருணகிரிநாதர் திருப்புகழ் பாடினார், நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடினார், குமரகுருபரர் சண்முக கவசம் இயற்றினார். அந்த இறையனுபூதி வாய்க்க முருகனை வேண்டி பக்தியினால் உண்டான முயற்சியை சிறகாய் விரித்து சிறிது தூரம் வானத்தில் பறந்துள்ளேன். நான் சிறுகுருவியெனினும் கழுகின் தலைக்கு மேலே அது கண்டறியாத அப்பாலுக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற பரப்பிரம்பத்தை நோக்கி சிறகை விரித்துள்ளேன். பக்திப்பித்தினால் எனது எழுத்தில் பிழைகள் மலிந் திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது.
முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது.
தற்போது மன்னார்குடியில் தனியார் கணினி பயிற்சி மையத்தில் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.