“ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவ வாழ்க்கையோட பல உச்சங்களை அடையணும் ன்னு ஆசைப்படறவன் நான்..! கடவுள் அனுக்கிரஹத்துல அது ஒவ்வொண்ணா நடந்துட்டு இருக்குதுன்னு நினைக்கறேன். எனக்கு அவ நல்ல மனைவி. என் குழந்தைக்கு நல்ல தாய். என் அம்மாவுக்கு நல்ல மருமகள். உங்க மேடைக்கு கிடைத்த அருமையான பாடகி. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அமையற வாழ்க்கைத் துணை சரியா இருந்தா ஸ்ருதியும், லயமும் சேர்ந்த பயணமாய்... வாழ்க்கை எப்பவுமே இனிமையா இருக்கும். எங்க வாழ்க்கையும் அப்படித்தான். சஹானா எனக்குக் கிடைத்த வரம்.”
சஹானா-கைலாஷின் இனிய காதல் மேற்கொண்டு கதை வாயிலாக!
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.