ஒருபுறம் தாயன்பு, மறுபுறம் நட்பு, மூன்றாம் முனையில் வேலையில்லா திண்டாட்டம், இதற்கிடையே காதல் என தென்னங்காற்றாய் வருடம் கதையோட்டம். பட்டினத்தார் பாடலுக்குப் புது அர்த்தம் சொல்லும் இந்து, பெண்ணை முழுமையாக நம்பும் தகப்பன், என ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் உயிர்த்துடிப்புள்ளது. நினைவில் நிற்பது. இத்தோடு, வேப்ப மரத்தையும் தென்னை மரங்களையும்கூடக் கதாபாத்திரங்களாக மாற்றியிருப்பது சிறப்பான விஷயம்.