முருகனின் புகழைப் பற்றிக் கூறிக் கொண்டே இருக்கலாம். முடிவில்லாத அமுதக் கடல். அந்தக் கடலிலிருந்து ஒரு சில அமுதத் துளிகளை அவன் அருளால் எடுத்துத் தருகிறேன். அவன் புகழை அவனே என் மூலம் எழுதிக் கொள்கிறான் என்பதே உண்மை. நம்மை இயக்கம் சக்தி அவன் அல்லவா?அனைவரும் அவன் அருள் பெற்று, வாழ்வில் சகல வளங்களுடன், நலங்களுடன் வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்.