Titanic - Oru Kaadhalin Varalaru

· Pustaka Digital Media
५.०
२ समीक्षाहरू
इ-पुस्तक
118
पृष्ठहरू
रेटिङ र रिभ्यूहरूको पुष्टि गरिएको हुँदैन  थप जान्नुहोस्

यो इ-पुस्तकका बारेमा

ஒரு ஆழ்கடலில் உறைவுகொண்டிருக்கும் காதல்

1912 ஏப்ரல் 10 உலகின் பிரமாண்டமான பயணியர் கப்பல் டைட்டானிக் பற்றி உலகின் அத்தனை பத்திரிகைகளும் சிலாகித்து எழுதியிருந்தன. அதன் ஆயுள் 1912 ஏப்ரல் 15 அதிகாலை 2.30 வரை தான் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

மிக உயரமான அந்த டைட்டானிக் கப்பல் வாழ்க்கையின் மிக உயரத்தில் இருந்து சரசரவென சரிந்து கீழேகீழே என பயணித்து எண்ணிப்பார்க்க முடியாத அளவு கீழே சென்று தரைதட்டிப் போவதென்பது எதனுடைய குறியீடாக மௌனசாட்சியாக இருப்பதாய் எடுத்துக்கொள்ளலாமா...

அன்று அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. அந்த கனவு கப்பலில் பயணிப்பவர்களுக்கு ஊரை கூடி நின்று கைஆட்டி பிரியாவிடை அளித்தது. நடக்க இருந்த எதிர்பாராத அந்த திருப்பத்தை உணராத அந்த பயணியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கையசைத்து விடைபெற்றார்கள்.

வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சியாய் அதில் பயணித்தவர்கள் அந்த பயணத்தை நினைத்துக்கொண்டிருந்தார்கள். எத்தனை பெரிய மகிழ்ச்சிக்கும் ஒரு காலஅளவு இருக்கிறது என்பதை யாரும் அப்போது எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த மகிழ்ச்சியின் காலஅளவு எவ்வளவு என்று அப்போது அவர்களுக்கு தெரியாது. இங்கே பார்க்கிற மகிழ்ச்சிகள் அத்தனைக்குமான காலஅளவும் அப்படித்தானா... அப்படி யென்றால் எவ்வளவு... யார் அதைப் பற்றி சிந்திக்கத் தயாராயிருக்கிறார்கள்... தெரியாது... இங்கே இவர்களுக்குள்ளிருந்த அந்த மகிழ்ச்சியின் காலஅளவு எத்தனை என்பதை அவர்களோடு பயணித்தே தெரிந்து கொள்ளலாம்.

காதல் பயணிப்புடன், தி. குலசேகர்

मूल्याङ्कन र समीक्षाहरू

५.०
२ समीक्षाहरू

लेखकको बारेमा

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

यो इ-पुस्तकको मूल्याङ्कन गर्नुहोस्

हामीलाई आफ्नो धारणा बताउनुहोस्।

जानकारी पढ्दै

स्मार्टफोन तथा ट्याबलेटहरू
AndroidiPad/iPhone का लागि Google Play किताब एप को इन्स्टल गर्नुहोस्। यो तपाईंको खातासॅंग स्वतः सिंक हुन्छ र तपाईं अनलाइन वा अफलाइन जहाँ भए पनि अध्ययन गर्न दिन्छ।
ल्यापटप तथा कम्प्युटरहरू
तपाईं Google Play मा खरिद गरिएको अडियोबुक आफ्नो कम्प्युटरको वेब ब्राउजर प्रयोग गरेर सुन्न सक्नुहुन्छ।
eReaders र अन्य उपकरणहरू
Kobo eReaders जस्ता e-ink डिभाइसहरूमा फाइल पढ्न तपाईंले फाइल डाउनलोड गरेर उक्त फाइल आफ्नो डिभाइसमा ट्रान्स्फर गर्नु पर्ने हुन्छ। ती फाइलहरू पढ्न मिल्ने इबुक रिडरहरूमा ती फाइलहरू ट्रान्स्फर गर्नेसम्बन्धी विस्तृत निर्देशनहरू प्राप्त गर्न मद्दत केन्द्र मा जानुहोस्।