32 பற்களுக்கு இடையில், ஒரு நாக்கு, கடிபடாமல் செயல்படுவது போல, மனினைச் சுற்றி தடைகள் தான், வாழ்க்கையாக உள்ளன என்கிறார். எனவே தடைகளை எதிர்த்து நிற்க, குரல் கொடுக்கிறார். தடைகளை நீக்கும் வரைக்கும், முயற்சியை விடாது, தொடரச் சொல்கிறார்.
நமது ஆசைகளால் நமக்கு வாழ்க்கையில் தடைகள் ஏற்படுகின்றன. அதேபோல் வாழ்க்கையின் வீழ்ச்சிகளில், வாழ்க்கையின் இருட்டு நேரங்களில், தடைகளை விலக்க, தீவிரமாக போராடும் குணத்தை, நாம் பெறவேண்டும் என்கிறார்.
ஏழ்மையோ, அழகற்றிருப்பதோ, வாழ்க்கையில் தடைகளாக இல்லை என்பதும், மனிதனின் வெறுப்பு, தான் என்ற உணர்வும், எடுத்ததுக்கெல்லாம் பதில் பேசுவதும், எதையும் தாமதப்படுத்துவதும், வாழ்க்கையின் தடைகளாகின்றன என்பதும், அரிய கருத்துக்களே.
பிறரை குற்றம் கூறாமல், பிறரிடத்தில் அதிகம் எதிர்பார்க்காமல், சகிப்புத்தனத்தாலும், 'முடியும்' என்று நினைப்பதாலும், நமது எத்தகைய திடமான தடைகளையும், நாமே வெற்றி கொள்ள முடியும் என்கிறார்.
எதையும் சரியாக எடைபோட்டு, பிறரையும் மதித்து, அவர்களுக்கு முடிந்த உதவியை செய்து, தன்னைச் சுற்றி, அன்பு விதைகளை விதைத்தால், வாழ்க்கையின் தடைகள் தூளாகிவிடும், என்பது ஆசிரியரின் ஒரு புதிய அணுகுமுறை. இனி, இன்நூலைப் படித்து பயணடையுங்கள்.