நாம் சங்கீர்த்தனமே உகந்தது என்பதை பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் “யக்ஞானாம் ஜப யக்ஞோஸ்மி” அதாவது அனைத்துவகை யக்ஞங்களிலும் நான் ஜப-யக்ஞமாக (நாம் சங்கீர்த்தனம்) இருக்கிறேன்” என்று சொல்வதற்கு இணங்க, நம்மை புனிதமாக்கக் கூடிய நாம சங்கீர்த்தனத்தைப் பாட வலியுறுத்தும். விதமாக “மனதிற்கினியான்” என்ற இந்நூல் அமைந்துள்ளது!
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.