அவளைத் தேடி வரும் பணக்காரன் ரோஹித்.
இவர்களுக்குள் பார்பிக்யூ அனல்போல் பற்றிக்கொள்ளும் காதல்.
சிமியின் அண்ணன் ஜவஹர் இவர்களின் காதலுக்கு உதவினானா?
ஜாதிமதப் பாகுபாடுகள், காதலுக்கு எதிர்ப்பு என்று பழமையில் ஊறிப்போன ரோஹித்தின் பிறந்த வீட்டார்.
இத்தகைய சூழலில் சிமியும், ரோஹித்தும் தங்கள் காதலில் வென்றார்களா? கதைக்குள் செல்வோம்.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.