Vizhven Endru Ninaithayo?

· Pustaka Digital Media
5,0
1 ulasan
eBook
118
Halaman
Rating dan ulasan tidak diverifikasi  Pelajari Lebih Lanjut

Tentang eBook ini

சிங்கப்பூரின் கலாசாரம், பொருளியல், மரபுடமை தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உலகளவில் அளிக்கப்பெறும் லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் தமிழருமான மாலன் ஆறுமாத காலம் சிங்கப்பூரில் தங்கியிருந்து 1965லிருந்து 2015 வரை எழுதப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அதன் சமூக வாழ்வியலை எவ்விதம் பிரதிபலித்தது என்ற ஆய்வினை மேற்கொண்டார். அவர் தனது அனுபவங்கள், வாசிப்பு இவற்றின் வழி அறிந்தவற்றைக் கொண்டு ஒரு நாடாக, சமூகமாக நாம் சிங்கப்பூரிடமிருந்து கற்க வேண்டியவை என்ன என்பதைப் பேசும் கட்டுரைத் தொடர் இது.

Rating dan ulasan

5,0
1 ulasan

Tentang pengarang

ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சிட்டி, சிவபாதசுந்தரம் போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள்/ விமர்சகர்களாலும், பிரபஞ்சன், பொன்னீலன், பா.செயப்பிரகாசம் போன்ற சமகால எழுத்தாளர்களாலும், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற அடுத்த தலைமுறையினராலும் ஒரு சேரப் பாராட்டப்படும் மாலன் (நாராயணன்) இலக்கிய உலகிலும் இதழியல் உலகிலும் நன்கறியப்பட்டவர் 1950 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பட்டப்படிப்பும், அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.

20 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில பரிசுகள் வென்றிருக்கின்றன. சமகால இலக்கியம் குறித்த வகுப்பறைகளில் இவரது படைப்புக்கள் விவாதிக்கப்படுகின்றன. பாண்டிச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு 1997ஆம் ஆண்டின் சிறந்த நூல் என்ற பரிசளித்து பாராட்டியது. மதுரைப் பல்கலைக்கழகம் திருநெல்வேலியில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இவரது படைப்புலகம் பற்றிய ஒருநாள் கருத்தரங்கை நிகழ்த்தியது.

இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளிலும் பிரன்ச், சீனம், மலாய் ஆகிய உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதை ஒன்றை திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா குறும்படமாகத் தயாரித்து இயக்கியுள்ளார்.

இவரது நாவல் ஜனகணமன ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எமர்ஜென்சிக் காலத்தை விமர்சிக்கும் இவரது கவிதை ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள டஃப்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஆலிவர் பெரி பதிப்பித்த ‘அவசரநிலைக்காலக் குரல்கள்'(Voices of Emergency- an anthology of protest poetry) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இவரது வேறு சில கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பில், சாகித்ய அகாதெமி இலக்கிய இதழான Indian Literature இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுதும் பரவி வாழும் தமிழர்களின் எழுத்துக்களை ‘புலம் பெயர் இலக்கியம்’ என 1994ஆம் ஆண்டே வகைப்படுத்தி தினமணிக் கதிரில் அதற்கென சிறப்பிதழ் வெளியிட்டு தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். அதனைத் தொடர்ந்து அதனைக் குறித்துப் பல பல்கலைக்கழகங்களில் சிறப்புரை ஆற்றியவர். 2011ல் சிங்கப்பூரிலும் 2014ல் கோயம்புத்தூரிலும் இந்தப் பொருள் குறித்த சர்வதேச மாநாடுகளை நட்த்துவதில் முக்கியப் பங்களித்தவர். 2015 ஆம ஆண்டு புலம் பெயர்ந்த எழுத்தாளார்களின் படைப்புக்களைத் தேர்ந்து தொகுத்து சாகித்ய அகாதெமி மூலம் நூலாக வெளியிட்டவர் சிங்கப்பூர் அரசு அளிக்கும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு, தங்க முனைப் பேனா விருது, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அளிக்கும் விருது, கனடா இலக்கியத் தோட்டம் அளிக்கும் விருது போன்ற சர்வதேச விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவராகப் பணியாற்றியவர்.

சிங்கப்பூரின் எழுத்தாளர் வாரம், மலேசியாவில் நடை பெற்ற இந்திய விழா, சாகித்ய அகாதெமியின் எழுத்துக்களின் திருவிழா போன்ற பல சர்வதேச இலக்கிய விழாக்களில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டவர். இலக்கியத்தை வளர்த்தெடுக்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட சாகித்ய அகாதெமி அமைப்பில் தமிழ் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கிறார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழக ஆளுநரால் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்.

தமிழகத்தின் முன்னணி இதழ்களான இந்தியா டுடே, தினமணி, குமுதம், குங்குமம், புதிய தலைமுறை ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சன் செய்திக் குழுமத்தின் செய்திப் பிரிவுத் தலைவராக இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்ட 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியை வழிநடத்தியதன் காரணாமாக தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறார். அண்மைக்காலம் வரை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இயக்குநராக கடமை ஆற்றியவர்.

யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் இதழான திசைகள் மின்னிதழை நிறுவியவர். இப்போது அது மின்பதிப்பு, மின் சொல், மின் செய்தி மின் ஆவணங்கள் ஆகியவை கொண்ட ஓர் மின் களஞ்சியமாக வளர்ந்துள்ளது.

Beri rating eBook ini

Sampaikan pendapat Anda.

Informasi bacaan

Smartphone dan tablet
Instal aplikasi Google Play Buku untuk Android dan iPad/iPhone. Aplikasi akan disinkronkan secara otomatis dengan akun Anda dan dapat diakses secara online maupun offline di mana saja.
Laptop dan komputer
Anda dapat mendengarkan buku audio yang dibeli di Google Play menggunakan browser web komputer.
eReader dan perangkat lainnya
Untuk membaca di perangkat e-ink seperti Kobo eReaders, Anda perlu mendownload file dan mentransfernya ke perangkat Anda. Ikuti petunjuk Pusat bantuan yang mendetail untuk mentransfer file ke eReaders yang didukung.