இந்த நூல் சி பி ஐ யின் முன்னாள் இயக்குநரும், ஐ பி எஸ் பணியிலிருந்து ஓய்வுபெற்றவருமான ஜோகிந்தர் சிங்கின் தலைசிறந்த படைப்பாகும். ஏழை விவசாயக் குடும்பத்திலிருந்து வந்து இவர் தனது கடும் உழைப்பினாலும் உத்வேகத்தாலும் வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்தவர். வாழ்வில் முன்னுக்கு வரவும், புகழையும் சாதனையையும் விரும்பும் எந்த ஒரு இளைஞனுக்கும். இவரது வெற்றிக்கதை பின்பற்றத் தகுந்ததாகும்.இந்தப் புத்தகத்தின் மூலமாக இவர் வெளிப்படுத்தும் வெற்றிக்கான மந்திரங்கள், இலட்சியமுடைய எந்த இளைஞனையும் சிகரத்துக்கு இட்டுச் செல்லும் சக்தி மிகுந்ததாகும். வெற்றிக்கான இந்த ஆலோசனைகள், உங்களது உள்ளத்தை உத்வேகமூட்டி மகத்தான புகழை எட்டச் செய்யும். உங்களது மனநிலையைத் தயார்செய்து, திறமைகளைக் கூர் தீட்டி இந்த வெற்றிக்கான மந்திரங்களை உள்வாங்கிக் கொண்டாலே போதும். வெற்றி உங்களதே!