இதையும் தவிர, மனநிலைக்கு ஒப்ப, நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதன், தன்னைத் தானே உணராத ஒருசில சமயங்களில் 'கிரகிக்கப்பட்ட" பழக்கங்களுக்கும் வெகுவாக அடிமையாகிறான். Accquired habits- எனப்படும் இந்தப் பழக்கங்கள் சமுதாயத்தின்படி நல்லவையாகவும் இருக்கலாம் இல்லை, தீயவையாகவும் இருக்கலாம்.
தூசு படிந்துபோன கண்ணாடியைத் துடைத் தால் "பளிச்சென்று ஆகிவிடுகிறது. எண்ணெய் இறங்கின வைரக்கல்லைப் பிரித்துக் கட்டினால் மீண்டும் ஒளிருகிறது. இதுபோலத்தான் கிரகிக்கப் பட்ட பழக்கங்களும். எந்த ஒரு மனிதனை வேண்டாத, கிரகிக்கப்பட்ட பழக்கங்கள் ஆட் கொண்டிருக்கின்றனவோ, அவற்றை அகற்றிவிட்டு, அந்த மனிதன் மட்டும் கரையேறுகையில், அவன் பழைய மனிதனாகவே ஆகிறான். இது உண்மை. நம் கதாநாயகன் ரகுவும், எப்படியோ வளர எண்ணி எப்படியோ வளர்ந்து, எப்படியோ வாழ எண்ணி எப்படியோ வாழ்ந்து, சந்தர்ப்பவசத்தால் கிரகிக்கப்பட்ட பழக்கங்களுக்கும் ஆளாகித் தவிப்பதைத்தான் 'ஏன்?' என்ற கதை சொல்லப் போகிறது.
இதற்கு 'ஏன்?' என்று பெயர் வைக்காமல் ஒரு மனிதனின் கதை' என்றே பெயர் வைக்க முதலில் எண்ணினேன். ஆனால் 'இக்கதையில் நாங்களும் சரிசமமாகப் பங்குகொண்டிருக்கிறோமே” என்று சாந்தியும், ப்ரியாவும் எண்ணியதால், இதனை 'ஏன்?' என்று மாற்றினேன்.
“ஏன்?" கதாபாத்திரங்களுக்கு. அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வாசகர்கள் தேவை.
“சாந்தி ஏன் இப்படி இருக்கிறாள்? எப்படி இருந்த ரகு இப்படி மாறிவிட்டானே! ஒரு குழந்தை மனசில் இவ்வளவு வேகமான உணர்ச்சிகளா?'என்ற கேள்விகளெல்லாம் எழுந்தாலும், எந்தச் சூழ்நிலையில் எதனால் இந்தப் பாத்திரங்கள், இப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்க்கும் வாசகர்கள்தான் 'ஏன்?' கதாபாத்திரங் களுக்குத் தேவை.
அன்புடன், சிவசங்கரி