Yen?

· Pustaka Digital Media
El. knyga
303
Puslapiai
Įvertinimai ir apžvalgos nepatvirtinti. Sužinokite daugiau

Apie šią el. knygą

ரகு, சாந்தி, ப்ரியா என்ற மூவரையும்அதாவது ஒரு கணவன், ஒரு மனைவி, அவர்களின் குழந்தை- இவர்களை மூன்று முக்கியக் கதா பாத்திரங்களாகக் கொண்டதாக நம் "ஏன்?" கதை இருந்தாலும், இக்கதைக்கு ஆணிவேர் ரகுதான். கதை என்பதற்காக, கதைக்குச் சுவை கூட்ட வேண்டும் என்பதற்காக, அடிப்படையான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் இக் கதையை எழுதவில்லை. மனிதனின் குண அமைப்பு, அதில் உண்டாகும் மாறுபாடுகள், தெரிந்து அவனாகவே உண்டாக்கிக்கொள்ளும் மாற்றங்கள், அவனையும் மீறி சந்தர்ப்பம் அவனுள் செய்யும் வினோதங்கள். இவற்றிற்குத்தான் நம் கதையில் முக்கியத்துவம்.

இதையும் தவிர, மனநிலைக்கு ஒப்ப, நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதன், தன்னைத் தானே உணராத ஒருசில சமயங்களில் 'கிரகிக்கப்பட்ட" பழக்கங்களுக்கும் வெகுவாக அடிமையாகிறான். Accquired habits- எனப்படும் இந்தப் பழக்கங்கள் சமுதாயத்தின்படி நல்லவையாகவும் இருக்கலாம் இல்லை, தீயவையாகவும் இருக்கலாம்.

தூசு படிந்துபோன கண்ணாடியைத் துடைத் தால் "பளிச்சென்று ஆகிவிடுகிறது. எண்ணெய் இறங்கின வைரக்கல்லைப் பிரித்துக் கட்டினால் மீண்டும் ஒளிருகிறது. இதுபோலத்தான் கிரகிக்கப் பட்ட பழக்கங்களும். எந்த ஒரு மனிதனை வேண்டாத, கிரகிக்கப்பட்ட பழக்கங்கள் ஆட் கொண்டிருக்கின்றனவோ, அவற்றை அகற்றிவிட்டு, அந்த மனிதன் மட்டும் கரையேறுகையில், அவன் பழைய மனிதனாகவே ஆகிறான். இது உண்மை. நம் கதாநாயகன் ரகுவும், எப்படியோ வளர எண்ணி எப்படியோ வளர்ந்து, எப்படியோ வாழ எண்ணி எப்படியோ வாழ்ந்து, சந்தர்ப்பவசத்தால் கிரகிக்கப்பட்ட பழக்கங்களுக்கும் ஆளாகித் தவிப்பதைத்தான் 'ஏன்?' என்ற கதை சொல்லப் போகிறது.

இதற்கு 'ஏன்?' என்று பெயர் வைக்காமல் ஒரு மனிதனின் கதை' என்றே பெயர் வைக்க முதலில் எண்ணினேன். ஆனால் 'இக்கதையில் நாங்களும் சரிசமமாகப் பங்குகொண்டிருக்கிறோமே” என்று சாந்தியும், ப்ரியாவும் எண்ணியதால், இதனை 'ஏன்?' என்று மாற்றினேன்.

“ஏன்?" கதாபாத்திரங்களுக்கு. அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வாசகர்கள் தேவை.

“சாந்தி ஏன் இப்படி இருக்கிறாள்? எப்படி இருந்த ரகு இப்படி மாறிவிட்டானே! ஒரு குழந்தை மனசில் இவ்வளவு வேகமான உணர்ச்சிகளா?'என்ற கேள்விகளெல்லாம் எழுந்தாலும், எந்தச் சூழ்நிலையில் எதனால் இந்தப் பாத்திரங்கள், இப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்க்கும் வாசகர்கள்தான் 'ஏன்?' கதாபாத்திரங் களுக்குத் தேவை.

அன்புடன், சிவசங்கரி

Apie autorių

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking. She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards. As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on. 'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.

Įvertinti šią el. knygą

Pasidalykite savo nuomone.

Skaitymo informacija

Išmanieji telefonai ir planšetiniai kompiuteriai
Įdiekite „Google Play“ knygų programą, skirtą „Android“ ir „iPad“ / „iPhone“. Ji automatiškai susinchronizuojama su paskyra ir jūs galite skaityti tiek prisijungę, tiek neprisijungę, kad ir kur būtumėte.
Nešiojamieji ir staliniai kompiuteriai
Galite klausyti garsinių knygų, įsigytų sistemoje „Google Play“ naudojant kompiuterio žiniatinklio naršyklę.
El. knygų skaitytuvai ir kiti įrenginiai
Jei norite skaityti el. skaitytuvuose, pvz., „Kobo eReader“, turite atsisiųsti failą ir perkelti jį į įrenginį. Kad perkeltumėte failus į palaikomus el. skaitytuvus, vadovaukitės išsamiomis pagalbos centro instrukcijomis.