சுவிட்ச் அணுகல்

3.4
50.2ஆ கருத்துகள்
500மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

சுவிட்ச்சுகள் அல்லது முன்புறக் கேமரா மூலம் உங்கள் மொபைலையோ டேப்லெட்டையோ கட்டுப்படுத்தலாம். திரையில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்தல், நகர்த்துதல், வார்த்தைகளை உள்ளிடுதல் மற்றும் பலவற்றுக்கு நீங்கள் சுவிட்ச்சுகளைப் பயன்படுத்தலாம்.

டச்ஸ்கிரீனுக்கு மாற்றாக ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சுவிட்ச்சுகள் மூலம் Android சாதனத்தைப் பயன்படுத்த Switch Access உங்களுக்கு உதவும். உங்கள் சாதனத்தைக் கையில் எடுத்து நேரடியாகப் பயன்படுத்த முடியாதபோது Switch Access உதவியாக இருக்கும்.

தொடங்குவதற்கு:
1. சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
2. அணுகல்தன்மை > Switch Access என்பதைத் தட்டவும்.

சுவிட்ச்சை அமைக்கவும்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரை Switch Access உங்கள் திரையில் உள்ளவற்றை ஸ்கேன் செய்து ஒவ்வொன்றாக ஹைலைட் செய்து காட்டும். சில வகையான சுவிட்ச்சுகளில் இருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம்:

சாதன சுவிட்ச்சுகள்
• USB அல்லது புளூடூத் சுவிட்ச்சுகள் (பட்டன்கள், கீபோர்டுகள் போன்றவை)
• சாதனத்திலுள்ள சுவிட்ச்சுகள் (ஒலியளவு பட்டன்கள் போன்றவை)

கேமரா சுவிட்ச்சுகள்
• வாயைத் திறக்கவும், சிரிக்கவும் அல்லது உங்கள் புருவங்களை உயர்த்தவும்
• இடதுபுறமோ வலதுபுறமோ மேற்புறமோ பார்க்கவும்

உங்கள் சாதனத்தை ஸ்கேன் செய்யவும்

சுவிட்ச்சை அமைத்த பிறகு திரையில் உள்ளவற்றை நீங்கள் ஸ்கேன் செய்து பயன்படுத்தலாம்.

• ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்தல்: திரையில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக ஹைலைட் செய்யும்.
• வரிசை-நெடுவரிசையை ஸ்கேன் செய்தல்: ஒவ்வொரு வரிசையாக ஹைலைட் செய்யும். ஒரு வரிசை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்த வரிசையில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக ஹைலைட் செய்யும்.
• பாயிண்ட் ஸ்கேனிங்: நகரும் கோடுகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட கிடைமட்ட மற்றும் செங்குத்து இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு "தேர்ந்தெடு" என்பதை அழுத்தவும்.
• குழுவாகத் தேர்ந்தெடுத்தல்: பலவகை வண்ணக் குழுக்களுக்கான சுவிட்ச்சுகளை ஒதுக்கலாம். திரையிலுள்ள ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வண்ணம் ஒதுக்கப்படும். சுவிட்ச்சை அழுத்தி உங்களுக்குத் தேவையான ஒன்றைக் கொண்ட வண்ணக் குழுவைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுக்குத் தேவையானது ஹைலைட் செய்யப்படும் வரை குழுவில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகத் தேர்வுசெய்யவும்.

மெனுக்களைப் பயன்படுத்துதல்

திரையில் ஒன்றைத் தேர்ந்தெடுத்ததும் ஒரு மெனு காட்டப்படும். அதில் தேர்ந்தெடுத்தல், நகர்த்துதல், நகலெடுத்தல், ஒட்டுதல் மற்றும் பல செயல்பாடுகள் இருக்கும்.
திரையின் மேற்பகுதியில் காட்டப்படும் மெனுவைப் பயன்படுத்தியும் நீங்கள் சாதனத்தில் உலாவலாம். உதாரணமாக, நீங்கள் அறிவிப்புகளைத் திறக்கலாம், முகப்புத் திரைக்குச் செல்லலாம், ஒலியளவை மாற்றலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

கேமரா சுவிட்ச்சுகள் மூலம் உலாவுதல்

முக சைகைகள் மூலம் உங்கள் மொபைலில் உலாவ கேமரா சுவிட்ச்சுகளைப் பயன்படுத்தலாம். உங்கள் மொபைலின் முன்புறக் கேமராவைப் பயன்படுத்தி மொபைலில் உலாவலாம் அல்லது ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஒவ்வொரு சைகையையும் அதன் கால அளவையும் உங்கள் தேவைகளுக்கேற்ப பிரத்தியேகமாக்கிக் கொள்ளலாம்.

ஷார்ட்கட்களைப் பதிவுசெய்தல்

தொடுதல் சைகையைப் பதிவு செய்து அதை ஒரு சுவிட்ச்சுக்கு ஒதுக்கலாம் அல்லது மெனுவில் அதைத் தேர்ந்தெடுத்துத் தொடங்கலாம். பின்ச் செய்தல், அளவை மாற்றுதல், நகர்த்துதல், ஸ்வைப் செய்தல், இருமுறை தட்டுதல் உட்பட பல செயல்பாடுகள் தொடுதல் சைகைகளில் அடங்கும். ஒரேயொரு சுவிட்ச்சைப் பயன்படுத்தி நீங்கள் அடிக்கடி பயன்படுத்துகின்ற செயல்பாடுகளையோ கடினமான செயல்பாடுகளையோ தொடங்கலாம். எ.கா. ஒரு மின்புத்தகத்தின் இரண்டு பக்கங்களைத் திருப்ப, இடதுபுறமாக இருமுறை ஸ்வைப் செய்யும் சைகையைப் பதிவு செய்தல்.

அனுமதிகளுக்கான அறிவிப்பு
• அணுகல்தன்மைச் சேவை: இது அணுகல்தன்மைச் சேவைக்கான ஆப்ஸ் என்பதால் இது உங்கள் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம், சாளர உள்ளடக்கத்தை மீட்டெடுக்கலாம் மற்றும் நீங்கள் உள்ளிடும் வார்த்தைகளைக் கண்காணிக்கலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
21 ஆக., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், மெசேஜ்கள், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.5
49.5ஆ கருத்துகள்
Selvakumar
18 ஆகஸ்ட், 2024
ஒரே ஞள
இது உதவிகரமாக இருந்ததா?
123 Saravanan
1 ஜூன், 2024
👍👍👍
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

இந்தப் புதுப்பிப்பில் பிழைதிருத்தங்களும் உள்ளன.