அழகான வால்பேப்பர்களுடனும் மேம்பட்ட அம்சங்களுடனும் உங்கள் திரையை அலங்கரியுங்கள். Google Earth தொகுப்பிலிருந்து ஒரு படத்தையோ, Google+ இலிருந்து ஓர் இயற்கைக் காட்சியையோ, உங்களுக்குப் பிடித்த வேறு ஏதேனும் படங்களையோ தேர்வு செய்யலாம். அதை நீங்கள் விரும்பும் போதெல்லாம் மாற்றவும் செய்யலாம். இதன் மூலம், உங்கள் ஃபோனின் திரை எப்போதும் உங்களுக்குப் பிடித்தவாறே இருக்கும்.
• நாளுக்கு நாள் அதிகரித்து வரும் படங்களின் தொகுப்பைப் பயன்படுத்தி மகிழுங்கள். Google Earth, Google+ மற்றும் பிற சேவைகளின் படங்களைப் பயன்படுத்தலாம்.
• உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கலாம். அனைவருக்கும் தெரியும்படி பூட்டுத் திரையில் ஒரு வால்பேப்பரையும், உங்களுக்காக முகப்புத் திரையில் வேறு ஒரு வால்பேப்பரையும் வைத்துக்கொள்ளலாம். (இதற்கு, Android™ 7.0, Nougat அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பாக இருக்கவேண்டும்.)
• ஒவ்வொரு நாளையும் புத்துணர்வுடன் தொடங்குங்கள். உங்களுக்குப் பிடித்த வகையைத் தேர்வுசெய்வதன் மூலம், ஒவ்வொரு நாளும் புதிய வால்பேப்பரைப் பெறுவீர்கள்.
தேவையான அனுமதிகள்
படங்கள்/மீடியா/ஃபைல்கள்: தனிப்பயன் படங்களை, வால்பேப்பர்களாக அமைக்க, இது தேவைப்படுகிறது.
சேமிப்பகம்: தற்போது அமைத்துள்ள வால்பேப்பரைக் காட்டுவதற்கும், தனிப்பயன் படங்களைத் தேர்ந்தெடுத்து வால்பேப்பர்களாக அமைப்பதற்கும் இது தேவைப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்டது:
9 செப்., 2020