"அழகு" அப்படியென்பது சிறிது காலமே நிலைத்திருக்கக் கூடிய ஆணவ ஆட்சி. ஒரு பெண் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு அழகு முக்கியத்துவம் கிடையாது. நல்ல குணம், பண்புகள், நேர்மை, உண்மை, விடாமுயற்சி இவை இருந்தால் அவள் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறாள் பவானி. அழகில்லை என்று மனைவியை உதறிவிட்டு வந்த கைலாசத்தின் அன்பை அவள் மீட்டெடுக்கிறாள் தன்னுடைய செய்கையின் மூலம். அந்த குடும்பத்தில் அமைதியைக் கொண்டுவந்து அவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துவிட்டு வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு அழகு முக்கியமில்ல என்று நிரூபிப்பது தான் என்னுடைய குறிக்கோளே தவிற உங்கள் வாழ்க்கையில் மீண்டும் குறிக்கிட அல்ல என்று கூறிவிட்டு தன்னை விரும்புபவரை மணந்துகொண்டு நிம்மதியாக வாழத் தொடங்குகிறாள் பவானி.