இலக்கியம், இதிகாசம், காப்பியங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதில் அடிப்படையாக இருப்பது பெண்களை, பெண்களுக்காக, பெண்களை காப்பாற்ற, பெண்களின் பெருமையை உயர்த்திப் பிடிக்கவே அந்தக் காவியங்கள் உண்டாகின. மேலும் ஐம்பெரும் காப்பியங்கள் நம் தமிழர் வாழ்வின் பண்பாடு, கலாசாரம், சமூக நிலை ,அரசாள்பவர்களின், நேர்மை, நியாயம், திறமைகளைப் பற்றியும், அந்தக் கால சமூக சூழல்களையும் விளக்கிப் பேசுகிறது. ஆணுக்கு நிகராக சம உரிமையும், திறமையும் பெற்றிருந்த பெண்கள் அரசியலிலும் மறைமுகமாக ஈடுபட்டார்கள். தன் கணவன் கள்வன் அல்ல என்று நிரூபித்த கண்ணகி, பசிப்பிணிப் போக்கிய மணிமேகலை, சீவகனுக்கு துணையாக நின்ற பெண்கள் , அநியாயம் செய்தவனை பழிவாங்கிய வளையாபதி, குண்டலகேசி, இவர்கள் சமண மதத்தையும் பரப்பினார்கள். அந்தக் காலகட்டங்களில் தமிழகத்தில் பரவி இருந்த சமண பௌத்த சமயங்களின் பெருமைகளையும் இந்த நூல்கள் விளக்கமாக எடுத்துரைக்கிறது. அதை பற்றிய சிறு சிறு கட்டுரைகளே காவியம் காட்டும் காரிகைகள் என்ற புத்தகம்.
Szórakoztató és szépirodalom