இந்த நாவலின் நாயகி கங்கா 'வெளுத்ததெல்லாம் பால்' என்று நம்பும் ரகம்! இவளை ஒரு தலையாய் நேசிக்கிறான் சிவகுரு. நட்புக்கு துரோகம் செய்யும் தோழி அகிலாவின் ஆலோசனைப்படி... சிவகுருவை விடுத்து தவறான நபரை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்கிறாள். அவனோ அவளது பெண்மைக்கே பேராபத்தை விளைவித்து படுகுழியில் தள்ளப் பார்க்கிறான்.
கங்கா கடைசியில் தப்பித்தாளா? இல்லையா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்....