Motivation (Tamil)

· Manjul Publishing
5.0
ការវាយតម្លៃ 8
សៀវភៅ​អេឡិចត្រូនិច
191
ទំព័រ
ការវាយតម្លៃ និងមតិវាយតម្លៃមិនត្រូវបានផ្ទៀងផ្ទាត់ទេ ស្វែងយល់បន្ថែម

អំពីសៀវភៅ​អេឡិចត្រូនិកនេះ

‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன.

 

அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘ஊக்குவிப்பு’ என்ற இந்நூலில், பிரபல நூலாசிரியரும் பேச்சாளருமான பிரையன் டிரேசி தன்னுடைய பல்லாண்டுகால அனுபவங்களின் அடிப்படையில், வேலையில் ஒரு தனிநபரின் செயற்திறனையும் குழுக்களின் செயற்திறனையும் அதிகரிப்பதற்கும், அற்புதமான விளைவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அவர்களுடைய ஆற்றலை அதிகரிப்பதற்கும் உதவக்கூடிய சக்திவாய்ந்த 21 வழிமுறைகளை விளக்கியிருக்கிறார்.

 அவற்றில் பின்வருவனவும் அடங்கும்:

 ·         உங்கள் ஊழியர்கள் தங்கள் வேலை குறித்து ஆழ்விருப்பம் கொள்ளும்படி செய்வது எப்படி

·         உங்கள் ஊழியர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளுவதற்கு உதவக்கூடிய விதத்தில் சவாலான வேலைகளை அவர்களுக்குக் கொடுப்பது எப்படி

·          சுதந்திரம், சார்பு ஆகிய இரண்டு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி உங்கள் ஊழியர்களைத் திருப்திப்படுத்துவது எப்படி

·         அவர்களை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்ற தடைகளைக் களைவது எப்படி

·         அவர்கள் வெற்றி பெறுவதற்குத் தேவையான பின்னூட்டக் கருத்துக்களை அவர்களுக்கு வழங்குவது எப்படி

ការដាក់ផ្កាយ និងមតិវាយតម្លៃ

5.0
ការវាយតម្លៃ 8

អំពី​អ្នកនិពន្ធ

 உலகில் இன்று தலைசிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழுபவர் பிரையன் டிரேசி. 75 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பெருநிறுவனங்களுக்கும் 10,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தலைமைத்துவம், மேலாண்மை, விற்பனை, வியாபார மாதிரி மறுசீரமைப்பு, லாப மேம்பாடு ஆகிய விஷயங்களில் பல கருத்தரங்குகளை அவர் வடிவமைத்து வழங்கியுள்ளார்.  உலகம் நெடுகிலும் 5,000க்கும் அதிகமான சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். இதை 50,00,000க்கும் அதிகமானோர் கேட்டுள்ளனர். அவர் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 2,50,000 மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் உருவாக்கியுள்ள சுவாரசியமான, காணொளி சார்ந்த பயிற்சி வகுப்புகள் 38 நாடுகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிரையன் டிரேசி ஒரு வெற்றிகரமான நூலாசிரியர். அவர் 80க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவை 42க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.

វាយតម្លៃសៀវភៅ​អេឡិចត្រូនិកនេះ

ប្រាប់យើងអំពីការយល់ឃើញរបស់អ្នក។

អាន​ព័ត៌មាន

ទូរសព្ទឆ្លាតវៃ និង​ថេប្លេត
ដំឡើងកម្មវិធី Google Play Books សម្រាប់ Android និង iPad/iPhone ។ វា​ធ្វើសមកាលកម្ម​ដោយស្វ័យប្រវត្តិជាមួយ​គណនី​របស់អ្នក​ និង​អនុញ្ញាតឱ្យ​អ្នកអានពេល​មានអ៊ីនធឺណិត ឬគ្មាន​អ៊ីនធឺណិត​នៅគ្រប់ទីកន្លែង។
កុំព្យូទ័រ​យួរដៃ និងកុំព្យូទ័រ
អ្នកអាចស្ដាប់សៀវភៅជាសំឡេងដែលបានទិញនៅក្នុង Google Play ដោយប្រើកម្មវិធីរុករកតាមអ៊ីនធឺណិតក្នុងកុំព្យូទ័ររបស់អ្នក។
eReaders និង​ឧបករណ៍​ផ្សេង​ទៀត
ដើម្បីអាននៅលើ​ឧបករណ៍ e-ink ដូចជា​ឧបករណ៍អាន​សៀវភៅអេឡិចត្រូនិក Kobo អ្នកនឹងត្រូវ​ទាញយក​ឯកសារ ហើយ​ផ្ទេរវាទៅ​ឧបករណ៍​របស់អ្នក។ សូមអនុវត្តតាម​ការណែនាំលម្អិតរបស់មជ្ឈមណ្ឌលជំនួយ ដើម្បីផ្ទេរឯកសារ​ទៅឧបករណ៍អានសៀវភៅ​អេឡិចត្រូនិកដែលស្គាល់។