அமெரிக்கா அதிபர் பதவியில் கறுப்பு இனத்தவர் ஒருவர் அமர்ந்தால், என்ன நிகழும் என்று விசாலமாகக் கற்பனை செய்து 'மனிதன்' என்ற பெயரில் ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதிய நூலினை அறிஞர் அண்ணா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழாக்கிய வடிவமே ' வெள்ளை மாளிகையில்' எனும் இந்நூல். தவிர்க்க இயலாத நிலையில் குடிஅரசுத் தலைவராகும் கறுப்பர் டக்ளஸ் டில்மன் பதவியை ஏற்றுக்கொண்டதும் என்னென்ன பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார், இறுதியில் அவருக்கு எதிராகச் செய்யப்படும் அனைத்து இழிசெயல்களையும் வென்று. எப்படி தொடர்ந்து அவர் குடிஅரசுத் தலைவராகப் பணியாற்றுகிறார் என்பதே கதையின் சாரம்!
படித்து மகிழுங்கள்.