உலகில் பழம் பெரும் பண்பாட்டுப் பெருமையைக் கொண்ட பகுதிகளில் நமது தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழர் பண்பாடு உலகப் புகழ் பெற்றதாகும். சமயம், வாணிபம், நுண்கலைகள், வீரம், தேசியம் ஆகியவை நமது பண்பாட்டின் சில முக்கிய அம்சங்களாகும். இவற்றுள்சமயம் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை அம்சமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. தமிழகத்தில் பண்டைக்காலம் முதல் சைவ நெறியும்,வைணவ நெறியும் பின்பற்றப்பட்டுள்ளன. ஆரியர்களின் சமய நெறியும்,பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்தவம் ஆகிய சமயங்களும் தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.
சமயங்களின் அடிப்படையில் எழுந்துள்ள இறைவழிபாட்டு ஆலயங்கள் நமது பண்பாட்டின் முக்கியச் சின்னங்களாக விளங்குகின்றன. தமிழ்நாட்டை ஆட்சி புரிந்த பாண்டியர், சோழர், பல்லவர், விஜயநகரமன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோரின் ஆதரவினால் புகழ்மிக்கபல ஆலயங்கள் எழுந்துள்ளன. ஆலயங்களை மையமாக வைத்தே சிற்பம், கட்டடம், இசை, நடனம், ஓவியம் முதலிய பல நுண்கலைகள் வளர்ந்துள்ளன. சங்ககாலம்முதல் இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்களே தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக இருந்து வருகின்றனர்.
இக்காரணத்தினால் தமிழகத்தில் ஏராளமான சைவ, வைணவ வழிபாட்டு ஆலயங்கள் எழுந்துள்ளன. பண்டைக்காலம்முதல் தற்காலம்வரை தமிழ்நாட்டில் எழுந்துள்ள முக்கிய இந்து ஆலயங்கள், கிறித்தவ ஆலயங்கள், இஸ்லாமியப் பள்ளிவாசல்கள், தர்காக்கள், சமணர் ஆலயங்கள் ஆகியவையும் சமயச்சார்பற்ற கட்டடங்களான கோட்டைகள், அரண்மனைகள் ஆகியவையும் நமது பண்பாட்டின் முக்கியச் சின்னங்களாகும்.
பேராசிரியர் திரு, V . கந்தசாமி அவர்கள் பல இடங்களுக்கு நேரில் சென்று ஆய்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார்.
படித்து பயன் பெறுங்கள்.